Tuesday, November 10, 2020

8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்

8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்

சென்னை : தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உட்பட 8 மாவட்டங்களில் நவ.,13 மற்றும் 14 ஆகிய 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் நவ.,12 மற்றும் நவ.,13 ஆகிய 2 நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மையம் கூறுகையில், இன்றைய வானிலையை பொறுத்த வரை, நேற்றைய நிலையை பெரும்பாலும் நீடித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில்வறண்ட வானிலை நிலவும். கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, துாத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களான, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் நவ.,13,14 ஆகிய 2 நாட்கள் கனமழை பெய்யும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamalar

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...