Monday, January 18, 2021

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

Added : ஜன 18, 2021 00:31

விக்கிரவாண்டி: பொங்கல் பண்டிகையை கொண்டாட, சொந்த ஊர் சென்ற மக்கள், சென்னைக்கு திரும்பியதால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, கடந்த, 14ம் தேதி முதல் அரசு விடுமுறை அறிவித்தது. பொங்கல் விழாவை கொண்டாட, சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள், சொந்த ஊருக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.கடந்த, 13ம் தேதி முதல், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக, 80 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன. பொங்கல் பண்டிகை முடிந்து, நேற்று முன்தினம் காணும் பொங்கல் தினத்தில் இருந்து, பலரும் சென்னை திரும்பத் துவங்கினர்.

இதையொட்டி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக சென்னைக்கு, நேற்று முன்தினம், 32 ஆயிரம் வாகனங்களும்; நேற்று, 41 ஆயிரம் வாகனங்களும் கடந்து சென்றன. வாகனங்கள் அதிகரித்ததால், சென்னை மார்க்கத்தில் கூடுதலாக மூன்று வழிகள் திறக்கப்பட்டு, மொத்தம் ஒன்பது வழிகளில், வாகனங்கள் செல்ல வசதி செய்யப்பட்டது. சுங்கச்சாவடி அதிகாரிகள் மற்றும் போலீசார், நெரிசலின்றி வாகனங்கள் கடப்பதற்கான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024