Saturday, February 13, 2021

வரதட்சணை கொடுமை கணவருக்கு 5 ஆண்டு

வரதட்சணை கொடுமை கணவருக்கு 5 ஆண்டு

Added : பிப் 12, 2021 23:31

சென்னை: வரதட்சணை கொடுமையில், மனைவி இறந்த வழக்கில், கணவர் மற்றும் மாமியாருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோகராஜ், 31. இவர், சென்னை, தேனாம்பேட்டையில் வசித்தபடி, தனியார் நிறுவனத்தில், கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், கும்பகோணத்தைச் சேர்ந்த மனோன்மணி என்பவருக்கும், 2014ல் திருமணம் நடந்தது. வரதட்சணை கொடுக்கவில்லை என, யோகராஜும், அவர் தாயும், மருமகளை கொடுமைப் படுத்தியதில், மனோன்மணி துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.சென்னை மகளிர் நீதிமன்ற, நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரணை நடத்தி, யோகராஜ் மற்றும் அவரது தாய்க்கு, தலா, 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா, 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024