Thursday, February 11, 2021

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு- வாட்டி வதைக்கும் குளிரால் மக்கள் தவிப்பு


ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு- வாட்டி வதைக்கும் குளிரால் மக்கள் தவிப்பு

பதிவு: பிப்ரவரி 10, 2021 14:52 IST

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் பனிப்பொழிவு உள்ளது. இதனால் 11 மணி வரை குளிர் வாட்டி வதைக்கிறது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியில் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் அதிகாலை நேரங்களில் வழக்கத்தை விட கூடுதலாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக குளிரும் வாட்டி வதைக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் காலை நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் பனிப்பொழிவு உள்ளது. இதனால் 11 மணி வரை குளிர் வாட்டி வதைக்கிறது. மலைப்பாதையில் பனி மூட்டம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை போட்ட படியே செல்கின்றனர். 10 மணி வரை பொது மக்கள் வெளியே வரமுடியால் தவித்து வருகிறார்கள்.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளது. ஏற்காடு மான் பூங்கா, அண்ணா பூங்கா, படகு குழாம், சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்பட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.



No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024