Wednesday, May 12, 2021

அரசு ஊழியர்களுக்கு ரூ.2,000 வழங்க தடை கோரி வழக்கு

அரசு ஊழியர்களுக்கு ரூ.2,000 வழங்க தடை கோரி வழக்கு

Added : மே 12, 2021 00:54

மதுரை:மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணம் 2,000 ரூபாய் வழங்க தடை கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணம், முதல் தவணையாக, மே 15 முதல், 2,000 ரூபாய் வழங்க அரசு அரசாணை பிறப்பித்தது. இதன் நோக்கம், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்வது.

தமிழகத்தில் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 அரிசி ரேஷன் கார்டு தார்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.இவ்வகை கார்டுதாரர்களில் மத்திய மாநில அரசு ஊழியர்களும் அடங்குவர். இவர்களுக்கு, ஊரடங்கு காலத்தில் சம்பள குறைப்பு இன்றி மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது.

இவர்களுக்குரிய நிவார ணத் தொகையை, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும்; தனியார் மருத்துவமனைகளில் கட்டணமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்தவும் பயன்படுத்தலாம். பல்வேறு தொழில், வணிகப் பிரிவினர், தனியார் நிறுவன ஊழியர்கள், கூலித் தொழிலாளிகள், கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதித்துள்ளனர். இவர்களுக்கு பொருளாதார உதவி தேவை.

மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024