Monday, November 21, 2016

'எனக்கா இந்த உலகத்தில் இடமில்லை?!' மதன் பிடிபட்ட நிமிடங்கள்

''எனக்கா இந்த உலகத்தில் இடமில்லை?!' மதன் பிடிபட்ட நிமிடங்கள் :'எனக்கா இந்த உலகத்தில் இடமில்லை' என்று மதன் சொன்ன தகவல், போலீஸாரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திருப்பூர், பூண்டி பாலத்தின் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் 6 மாதம் தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் இன்று மதியம் கைது செய்யப்பட்டார். வடமாநிலங்களில் சுற்றித் திரிந்த மதன், தமிழகத்துக்கு வந்த போது போலீஸிடம் சிக்கிக் கொண்டார். மதனை, ஒரு வீட்டின் அறையில் பதுங்கி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "வேந்தர் மூவிஸ் மதன் மாயமான வழக்கு எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த வழக்கு ஒவ்வொரு முறை நீதிமன்றத்தில் வரும்போது மதன், சம்பந்தமான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தோம். முதலில் நீதிமன்றம், போலீஸாரின் விசாரணையை பாராட்டியது. மாதங்கள் கடந்த நிலையில் மதனை பிடிக்க முடியவில்லை என்றதும் நீதிமன்றம் எங்களுக்கு காலக்கெடு விதித்தது. இதனால் மதன் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினோம். மதனின் உறவினர்கள், நண்பர்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் செல்போன் நம்பர்களை கண்காணித்தோம். மேலும், மதனுக்கு யார் மூலம் பண சப்ளை செய்யப்படுகிறது என்றும் ஆராய்ந்தோம். அப்போது மதனின் மனைவியின் உறவினரான ஒரு பெண் மூலம் பண சப்ளை செய்யப்படுவது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக இருந்த காலக்கட்டத்தில் மதன், உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு பண்ணை வீடுகள் வாங்கிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதனால் அந்த வீடுகள் வாங்கிய விவரங்களை சேகரித்தோம். அப்போதுதான் மதன், திருப்பூரில் உள்ள உறவினர் பெண்ணை சந்திக்க வரும் தகவல் தெரியவந்தது. உடனடியாக மதனை கைது செய்ய 'ஆபரேசன் எம்' வகுக்கப்பட்டது. இந்த தகவல் திருப்பூரில் உள்ள நுண்ணறிவு போலீஸாருக்கு கூட தெரிவிக்கப்படவில்லை. உயரதிகாரிகளுக்கும், தனிப்படை போலீஸ் அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும். துணை கமிஷனர் ஒருவர் தலைமையில் இரண்டு உதவி கமிஷனர்கள், மூன்று இன்ஸ்பெக்டர்கள் திருப்பூருக்கு விரைந்தனர். அவர்கள், திருப்பூர், பூண்டி பாலத்தின் அருகே உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டை சுற்றி முகாமிட்டனர். சரியாக நேற்று மாலை தாடியுடன் மதன், நடந்து வந்தார். அதை போலீஸார் நோட்டமிட்டதோடு, மதனை பின்தொடர்ந்தனர். வீட்டிற்குள் மதன், சென்றதும் உடனடியாக போலீஸார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த வீட்டில் மதன் உள்பட 4 பேர் இருந்துள்ளனர். துப்பாக்கி முனையில் போலீஸார் வீட்டை சுற்றி வளைத்ததும் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்து வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளையும் போலீஸார் அங்குலம் அங்குலமாக தேடினர். ஆனால் மதனை காணவில்லை. இதனால் பின்வழியாக மதன், தப்பிச் சென்று விட்டாரா என்ற சந்தேகமும் தனிப்படை போலீஸாருக்கு எழுந்தது. இருப்பினும், போலீஸார் ஒரு அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கு மதன், பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீஸாரைப் பார்த்ததும் மதன், அப்படியே கையை உயர்த்தி சரண் அடைந்து விட்டார். அவரைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்த போலீஸார், அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். மதன், பிடிப்பட்டதும், உடனடியாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜிக்கு போனில் தகவல் சொல்லப்பட்டது. உடனே ஜார்ஜிம், வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த தகவல் டி.ஜி.பிக்கும் சொல்லப்பட்டது. மதன், பிடிப்பட்ட தகவலை ரகசியமாக வைத்திருக்கும்படி தனிப்படை டீம்க்கு தகவல் சொல்லப்பட்டது. உடனடியாக அவர்களும் உயரதிகாரிகள் இரண்டு பேரைத் தவிர யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியம் காத்தனர். சென்னைக்கு அழைத்து வரும் போது மதனிடம், இத்தனை நாட்கள் எங்கு தலைமறைவாக இருந்தீர்கள் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே, 'எனக்காக இந்தவூலகத்தில் இடமில்லை. எனக்கு உதவி செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அங்கேதான் தங்கியிருந்தேன். சமீபத்தில் சென்னைக்கு கூட ஒரு முறை வந்து சென்றேன்' என்று சொன்னதும் போலீஸாருக்கு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதன், தலைமறைவாக இருந்த நாட்களில் வடமாநிலங்களில்தான் அதிக காலங்கள் இருந்துள்ளார். அவர் எழுதிய கடிதம் குறித்து போலீஸார் கேட்ட போது, அந்தசமயத்தில் அப்படி எழுதினேன். கங்கை நதிக்கும் சென்றேன். அங்குள்ள ஓட்டலிலும் தங்கினேன். ஆனால், அதற்குள் என்னுடைய தற்கொலை எண்ணம் மாறி விட்டது. இதனால், ஒவ்வொரு இடங்களாக தலைமறைவாக இருந்தேன். என்னைப் பற்றி வந்த செய்திகள் எல்லாம் எனக்கு தெரியும். அதில் ஒருசில உண்மை, மற்றது எல்லாம் கதைகள். எஸ்.ஆர்.எம். குழுமம் குறித்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்று அந்த போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தும்போது அவர்களுக்கு முழுஒத்துழைப்பையும் மதன் கொடுத்துள்ளார். இப்போது கூட போலீஸாரின் பிடியில் மதன், சிக்கி இருக்க மாட்டார். அவரது உறவினரான அந்தப் பெண்ணை போலீஸார் தங்களது கஸ்டடியில் எடுத்த தகவல் மதனுக்கு தெரியவில்லை. இதனால் வசமாக அந்த பெண்ணின் பேச்சை நம்பி வந்து சிக்கி கொண்டார் என்றனர் உள்விவரம் தெரிந்த போலீஸ் வட்டாரங்கள். மதன் பிடிப்பட்ட தகவலை பகிர்ந்த போலீஸ் உயரதிகாரி ஒருவர், "மணிப்பூரில் கடந்த ஒரு மாதமாக மதனை தேடி வந்த சமயத்தில் திருப்பூரில் அவர் வரும் தகவல் எங்களுக்கு கிடைத்தது. அவரது உறவுக்கார பெண்ணின் வீட்டுக்கு வந்த மதனை கைது செய்ய திட்டம் வகுத்தோம். இதற்காக அங்கு ரகசியமாக சென்று மதனை பிடிக்க முடிவு செய்தோம். மதன், அந்த வீட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ததும் அங்கு சென்று சோதனை செய்தோம். அப்போது அந்த பெண், இரண்டு குழந்தைகள் இருந்தனர். மதனை மட்டும் காணவில்லை. ஒவ்வொரு அறையாக சோதனை செய்தபோதும் மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த வீட்டில் பதுங்கு அறைகள் எதுவும் இருக்குமா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. உடனடியாக கடப்பாரையைக் கொண்டு சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையின் தரைதளத்திலிருந்து சத்தம் வேறுவிதமதாக வந்தது. உடனடியாக அந்த அறையின் தரைதளத்தை உடைத்து பார்த்த போது சிறிய அளவில் ஒரு பதுங்கு குழி இருந்தது. அங்குதான் மதன் பதுங்கி இருந்தார். அவரை உடனே மேலே கொண்டு வந்தோம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை போலீஸ் காவலில் எடுக்கவும் மனு தாக்கல் செய்ய உள்ளோம்"என்றார். எஸ்.மகேஷ் Dailyhunt

:'எனக்கா இந்த உலகத்தில் இடமில்லை' என்று மதன் சொன்ன தகவல், போலீஸாரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திருப்பூர், பூண்டி பாலத்தின் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் 6 மாதம் தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் இன்று மதியம் கைது செய்யப்பட்டார். வடமாநிலங்களில் சுற்றித் திரிந்த மதன், தமிழகத்துக்கு வந்த போது போலீஸிடம் சிக்கிக் கொண்டார். மதனை, ஒரு வீட்டின் அறையில் பதுங்கி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "வேந்தர் மூவிஸ் மதன் மாயமான வழக்கு எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
இந்த வழக்கு ஒவ்வொரு முறை நீதிமன்றத்தில் வரும்போது மதன், சம்பந்தமான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தோம். முதலில் நீதிமன்றம், போலீஸாரின் விசாரணையை பாராட்டியது. மாதங்கள் கடந்த நிலையில் மதனை பிடிக்க முடியவில்லை என்றதும் நீதிமன்றம் எங்களுக்கு காலக்கெடு விதித்தது. இதனால் மதன் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினோம்.
மதனின் உறவினர்கள், நண்பர்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் செல்போன் நம்பர்களை கண்காணித்தோம். மேலும், மதனுக்கு யார் மூலம் பண சப்ளை செய்யப்படுகிறது என்றும் ஆராய்ந்தோம். அப்போது மதனின் மனைவியின் உறவினரான ஒரு பெண் மூலம் பண சப்ளை செய்யப்படுவது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக இருந்த காலக்கட்டத்தில் மதன், உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு பண்ணை வீடுகள் வாங்கிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதனால் அந்த வீடுகள் வாங்கிய விவரங்களை சேகரித்தோம். அப்போதுதான் மதன், திருப்பூரில் உள்ள உறவினர் பெண்ணை சந்திக்க வரும் தகவல் தெரியவந்தது. உடனடியாக மதனை கைது செய்ய 'ஆபரேசன் எம்' வகுக்கப்பட்டது. இந்த தகவல் திருப்பூரில் உள்ள நுண்ணறிவு போலீஸாருக்கு கூட தெரிவிக்கப்படவில்லை. உயரதிகாரிகளுக்கும், தனிப்படை போலீஸ் அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும்.
துணை கமிஷனர் ஒருவர் தலைமையில் இரண்டு உதவி கமிஷனர்கள், மூன்று இன்ஸ்பெக்டர்கள் திருப்பூருக்கு விரைந்தனர். அவர்கள், திருப்பூர், பூண்டி பாலத்தின் அருகே உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டை சுற்றி முகாமிட்டனர். சரியாக நேற்று மாலை தாடியுடன் மதன், நடந்து வந்தார். அதை போலீஸார் நோட்டமிட்டதோடு, மதனை பின்தொடர்ந்தனர்.
வீட்டிற்குள் மதன், சென்றதும் உடனடியாக போலீஸார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த வீட்டில் மதன் உள்பட 4 பேர் இருந்துள்ளனர். துப்பாக்கி முனையில் போலீஸார் வீட்டை சுற்றி வளைத்ததும் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்து வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளையும் போலீஸார் அங்குலம் அங்குலமாக தேடினர். ஆனால் மதனை காணவில்லை. இதனால் பின்வழியாக மதன், தப்பிச் சென்று விட்டாரா என்ற சந்தேகமும் தனிப்படை போலீஸாருக்கு எழுந்தது. இருப்பினும், போலீஸார் ஒரு அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கு மதன், பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீஸாரைப் பார்த்ததும் மதன், அப்படியே கையை உயர்த்தி சரண் அடைந்து விட்டார். அவரைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்த போலீஸார், அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
மதன், பிடிப்பட்டதும், உடனடியாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜிக்கு போனில் தகவல் சொல்லப்பட்டது. உடனே ஜார்ஜிம், வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த தகவல் டி.ஜி.பிக்கும் சொல்லப்பட்டது. மதன், பிடிப்பட்ட தகவலை ரகசியமாக வைத்திருக்கும்படி தனிப்படை டீம்க்கு தகவல் சொல்லப்பட்டது. உடனடியாக அவர்களும் உயரதிகாரிகள் இரண்டு பேரைத் தவிர யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியம் காத்தனர்.
சென்னைக்கு அழைத்து வரும் போது மதனிடம், இத்தனை நாட்கள் எங்கு தலைமறைவாக இருந்தீர்கள் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே, 'எனக்காக இந்தவூலகத்தில் இடமில்லை. எனக்கு உதவி செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அங்கேதான் தங்கியிருந்தேன். சமீபத்தில் சென்னைக்கு கூட ஒரு முறை வந்து சென்றேன்' என்று சொன்னதும் போலீஸாருக்கு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதன், தலைமறைவாக இருந்த நாட்களில் வடமாநிலங்களில்தான் அதிக காலங்கள் இருந்துள்ளார். அவர் எழுதிய கடிதம் குறித்து போலீஸார் கேட்ட போது, அந்தசமயத்தில் அப்படி எழுதினேன். கங்கை நதிக்கும் சென்றேன். அங்குள்ள ஓட்டலிலும் தங்கினேன். ஆனால், அதற்குள் என்னுடைய தற்கொலை எண்ணம் மாறி விட்டது. இதனால், ஒவ்வொரு இடங்களாக தலைமறைவாக இருந்தேன். என்னைப் பற்றி வந்த செய்திகள் எல்லாம் எனக்கு தெரியும். அதில் ஒருசில உண்மை, மற்றது எல்லாம் கதைகள். எஸ்.ஆர்.எம். குழுமம் குறித்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்று அந்த போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தும்போது அவர்களுக்கு முழுஒத்துழைப்பையும் மதன் கொடுத்துள்ளார்.
இப்போது கூட போலீஸாரின் பிடியில் மதன், சிக்கி இருக்க மாட்டார். அவரது உறவினரான அந்தப் பெண்ணை போலீஸார் தங்களது கஸ்டடியில் எடுத்த தகவல் மதனுக்கு தெரியவில்லை. இதனால் வசமாக அந்த பெண்ணின் பேச்சை நம்பி வந்து சிக்கி கொண்டார் என்றனர் உள்விவரம் தெரிந்த போலீஸ் வட்டாரங்கள்.
மதன் பிடிப்பட்ட தகவலை பகிர்ந்த போலீஸ் உயரதிகாரி ஒருவர், "மணிப்பூரில் கடந்த ஒரு மாதமாக மதனை தேடி வந்த சமயத்தில் திருப்பூரில் அவர் வரும் தகவல் எங்களுக்கு கிடைத்தது. அவரது உறவுக்கார பெண்ணின் வீட்டுக்கு வந்த மதனை கைது செய்ய திட்டம் வகுத்தோம். இதற்காக அங்கு ரகசியமாக சென்று மதனை பிடிக்க முடிவு செய்தோம். மதன், அந்த வீட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ததும் அங்கு சென்று சோதனை செய்தோம். அப்போது அந்த பெண், இரண்டு குழந்தைகள் இருந்தனர். மதனை மட்டும் காணவில்லை. ஒவ்வொரு அறையாக சோதனை செய்தபோதும் மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த வீட்டில் பதுங்கு அறைகள் எதுவும் இருக்குமா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. உடனடியாக கடப்பாரையைக் கொண்டு சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையின் தரைதளத்திலிருந்து சத்தம் வேறுவிதமதாக வந்தது. உடனடியாக அந்த அறையின் தரைதளத்தை உடைத்து பார்த்த போது சிறிய அளவில் ஒரு பதுங்கு குழி இருந்தது. அங்குதான் மதன் பதுங்கி இருந்தார். அவரை உடனே மேலே கொண்டு வந்தோம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை போலீஸ் காவலில் எடுக்கவும் மனு தாக்கல் செய்ய உள்ளோம்"என்றார்.
எஸ்.மகேஷ்
Dailyhunt
:'எனக்கா இந்த உலகத்தில் இடமில்லை' என்று மதன் சொன்ன தகவல், போலீஸாரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திருப்பூர், பூண்டி பாலத்தின் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் 6 மாதம் தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் இன்று மதியம் கைது செய்யப்பட்டார். வடமாநிலங்களில் சுற்றித் திரிந்த மதன், தமிழகத்துக்கு வந்த போது போலீஸிடம் சிக்கிக் கொண்டார். மதனை, ஒரு வீட்டின் அறையில் பதுங்கி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "வேந்தர் மூவிஸ் மதன் மாயமான வழக்கு எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
இந்த வழக்கு ஒவ்வொரு முறை நீதிமன்றத்தில் வரும்போது மதன், சம்பந்தமான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தோம். முதலில் நீதிமன்றம், போலீஸாரின் விசாரணையை பாராட்டியது. மாதங்கள் கடந்த நிலையில் மதனை பிடிக்க முடியவில்லை என்றதும் நீதிமன்றம் எங்களுக்கு காலக்கெடு விதித்தது. இதனால் மதன் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினோம்.
மதனின் உறவினர்கள், நண்பர்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் செல்போன் நம்பர்களை கண்காணித்தோம். மேலும், மதனுக்கு யார் மூலம் பண சப்ளை செய்யப்படுகிறது என்றும் ஆராய்ந்தோம். அப்போது மதனின் மனைவியின் உறவினரான ஒரு பெண் மூலம் பண சப்ளை செய்யப்படுவது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக இருந்த காலக்கட்டத்தில் மதன், உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு பண்ணை வீடுகள் வாங்கிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதனால் அந்த வீடுகள் வாங்கிய விவரங்களை சேகரித்தோம். அப்போதுதான் மதன், திருப்பூரில் உள்ள உறவினர் பெண்ணை சந்திக்க வரும் தகவல் தெரியவந்தது. உடனடியாக மதனை கைது செய்ய 'ஆபரேசன் எம்' வகுக்கப்பட்டது. இந்த தகவல் திருப்பூரில் உள்ள நுண்ணறிவு போலீஸாருக்கு கூட தெரிவிக்கப்படவில்லை. உயரதிகாரிகளுக்கும், தனிப்படை போலீஸ் அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும்.
துணை கமிஷனர் ஒருவர் தலைமையில் இரண்டு உதவி கமிஷனர்கள், மூன்று இன்ஸ்பெக்டர்கள் திருப்பூருக்கு விரைந்தனர். அவர்கள், திருப்பூர், பூண்டி பாலத்தின் அருகே உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டை சுற்றி முகாமிட்டனர். சரியாக நேற்று மாலை தாடியுடன் மதன், நடந்து வந்தார். அதை போலீஸார் நோட்டமிட்டதோடு, மதனை பின்தொடர்ந்தனர்.
வீட்டிற்குள் மதன், சென்றதும் உடனடியாக போலீஸார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த வீட்டில் மதன் உள்பட 4 பேர் இருந்துள்ளனர். துப்பாக்கி முனையில் போலீஸார் வீட்டை சுற்றி வளைத்ததும் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்து வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளையும் போலீஸார் அங்குலம் அங்குலமாக தேடினர். ஆனால் மதனை காணவில்லை. இதனால் பின்வழியாக மதன், தப்பிச் சென்று விட்டாரா என்ற சந்தேகமும் தனிப்படை போலீஸாருக்கு எழுந்தது. இருப்பினும், போலீஸார் ஒரு அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கு மதன், பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீஸாரைப் பார்த்ததும் மதன், அப்படியே கையை உயர்த்தி சரண் அடைந்து விட்டார். அவரைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்த போலீஸார், அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
மதன், பிடிப்பட்டதும், உடனடியாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜிக்கு போனில் தகவல் சொல்லப்பட்டது. உடனே ஜார்ஜிம், வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த தகவல் டி.ஜி.பிக்கும் சொல்லப்பட்டது. மதன், பிடிப்பட்ட தகவலை ரகசியமாக வைத்திருக்கும்படி தனிப்படை டீம்க்கு தகவல் சொல்லப்பட்டது. உடனடியாக அவர்களும் உயரதிகாரிகள் இரண்டு பேரைத் தவிர யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியம் காத்தனர்.
சென்னைக்கு அழைத்து வரும் போது மதனிடம், இத்தனை நாட்கள் எங்கு தலைமறைவாக இருந்தீர்கள் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே, 'எனக்காக இந்தவூலகத்தில் இடமில்லை. எனக்கு உதவி செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அங்கேதான் தங்கியிருந்தேன். சமீபத்தில் சென்னைக்கு கூட ஒரு முறை வந்து சென்றேன்' என்று சொன்னதும் போலீஸாருக்கு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதன், தலைமறைவாக இருந்த நாட்களில் வடமாநிலங்களில்தான் அதிக காலங்கள் இருந்துள்ளார். அவர் எழுதிய கடிதம் குறித்து போலீஸார் கேட்ட போது, அந்தசமயத்தில் அப்படி எழுதினேன். கங்கை நதிக்கும் சென்றேன். அங்குள்ள ஓட்டலிலும் தங்கினேன். ஆனால், அதற்குள் என்னுடைய தற்கொலை எண்ணம் மாறி விட்டது. இதனால், ஒவ்வொரு இடங்களாக தலைமறைவாக இருந்தேன். என்னைப் பற்றி வந்த செய்திகள் எல்லாம் எனக்கு தெரியும். அதில் ஒருசில உண்மை, மற்றது எல்லாம் கதைகள். எஸ்.ஆர்.எம். குழுமம் குறித்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்று அந்த போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தும்போது அவர்களுக்கு முழுஒத்துழைப்பையும் மதன் கொடுத்துள்ளார்.
இப்போது கூட போலீஸாரின் பிடியில் மதன், சிக்கி இருக்க மாட்டார். அவரது உறவினரான அந்தப் பெண்ணை போலீஸார் தங்களது கஸ்டடியில் எடுத்த தகவல் மதனுக்கு தெரியவில்லை. இதனால் வசமாக அந்த பெண்ணின் பேச்சை நம்பி வந்து சிக்கி கொண்டார் என்றனர் உள்விவரம் தெரிந்த போலீஸ் வட்டாரங்கள்.
மதன் பிடிப்பட்ட தகவலை பகிர்ந்த போலீஸ் உயரதிகாரி ஒருவர், "மணிப்பூரில் கடந்த ஒரு மாதமாக மதனை தேடி வந்த சமயத்தில் திருப்பூரில் அவர் வரும் தகவல் எங்களுக்கு கிடைத்தது. அவரது உறவுக்கார பெண்ணின் வீட்டுக்கு வந்த மதனை கைது செய்ய திட்டம் வகுத்தோம். இதற்காக அங்கு ரகசியமாக சென்று மதனை பிடிக்க முடிவு செய்தோம். மதன், அந்த வீட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ததும் அங்கு சென்று சோதனை செய்தோம். அப்போது அந்த பெண், இரண்டு குழந்தைகள் இருந்தனர். மதனை மட்டும் காணவில்லை. ஒவ்வொரு அறையாக சோதனை செய்தபோதும் மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த வீட்டில் பதுங்கு அறைகள் எதுவும் இருக்குமா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. உடனடியாக கடப்பாரையைக் கொண்டு சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையின் தரைதளத்திலிருந்து சத்தம் வேறுவிதமதாக வந்தது. உடனடியாக அந்த அறையின் தரைதளத்தை உடைத்து பார்த்த போது சிறிய அளவில் ஒரு பதுங்கு குழி இருந்தது. அங்குதான் மதன் பதுங்கி இருந்தார். அவரை உடனே மேலே கொண்டு வந்தோம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை போலீஸ் காவலில் எடுக்கவும் மனு தாக்கல் செய்ய உள்ளோம்"என்றார்.

எஸ்.மகேஷ்
Dailyhunt

ரயில் விபத்துகள். 92 பைசாவுக்கு உங்கள் பயணத்தை காப்பீடு செய்யுங்கள்

ரயில் விபத்துகள். 92 பைசாவுக்கு உங்கள் பயணத்தை காப்பீடு செய்யுங்கள்!

சாலை வழி போக்குவரத்தைக் காட்டிலும் ரயில் பயணம் பாதுகாப்பானது என்று பொது மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும்போது, நேற்று உத்தரப்பிரதேசத்தில் இந்தூர் - பாட்னா ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது, சற்று கலத்தையே ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வேயில் கடந்த 15 ஆண்டுகளில் விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்திருக்கிறது. இருந்த போதும் கடந்த 5 ஆண்டுகளில் 555 பேர் ரயில் விபத்துகளில் பலியாகியுள்ளனர்.
இந்தூர் - பாட்னா ரயிலைப் போல, தடம் புரள்வதால் ஏற்படும் விபத்துகள் தான் அதிகம். இவையே அதிக சேதத்தையும் ஏற்படுத்துகின்றன. 2010-2011 முதல் 2014-2015 வரையிலான கால கட்டத்தில் நடந்த ரயில் விபத்துகளின் எண்ணிக்கைய, கீழே உள்ள சார்ட்டில் காணலாம்.
ஆதாரம்: Indian Railways, Safety Performance 2014-15
கடந்த 5 ஆண்டுகளில் 300 ரயில்கள் தண்டவாளத்தை விட்டு நிலை தடுமாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

கிட்டத்தட்ட 50% ரயில் விபத்துகள் தடம் புரள்வதால் ஏற்படுகின்றன என்பது சார்ட்டில் தெளிவாக காண முடிகிறது. 66 ஆயிரம் கி.மீ ரயில் பாதை ( பூமியின் சுற்றளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்) கொண்ட பிரம்மாண்ட இந்திய ரயில் தடங்களை சீரமைத்து, தினமும் பயணிக்கும் 2.3 கோடி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ரயில்வே அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் உண்டு. ஆனால், உண்மை நிலை கொஞ்சம் அதிர வைக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகளில் 261 விபத்துகள் ரயில்வே ஊழியர்களின் கவனக் குறைவால் நடந்துள்ளது. 40% விபத்துகளுக்கு ரயில்வே ஊழியர்களே காரணமாக உள்ளனர்.

இந்த ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரயில்வே அமைச்சகம் சார்பில் அனைத்து ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கும் வழிகாட்டுதல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், தொடர்ந்து அதிகரித்து வரும் ரயில் தடம்புரளும் விபத்துகளைக் தவிர்க்க, தண்டவாளங்களை சரி செய்யும் பணிகளை 15 நாட்களுக்கு முழு வீச்சில் நடத்துமாறு ரயில் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு அறிவுறுத்தியிருந்தது. அந்த ஆணை முழுமையாக பின்பற்றியிருந்தால் 133 உயிர்கள் வீணாக பறிபோகாமல் இருந்திருக்கலாம். இதைத்தான் கவனக் குறைவு என்று கூற வேண்டி இருக்கிறது. இதன் விளைவாக சில முக்கிய அதிகாரிகளின் தலைகள் உருளும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

இனியாவது மக்களின் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள ரயில்வே ஊழியர்கள் உறு துணையாக இருப்பார்கள் என்று நம்புவோம்.
இன்னொரு பக்கம் பயணிகளான நாமும் பின்பற்ற வேண்டிய ஒன்று உள்ளது.
ரயில் பயணத்தின்போது எதிர்பாராத அசம்பாவிதங்களால் உயிரிழக்கும், காயமடைவோருக்கு என முன்னெச்சரிக்கையாக காப்பீட்டு திட்டம் ஒன்று செயல்பாட்டில் உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் டிக்கெட் ரிசர்வ் செய்யும்போது, பயணக் காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம். இதன் விலை வெறும் 92 பைசா மட்டுமே. அசம்பாவிதம் நடக்கும்பட்சத்தில் உயிரிழ்ந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் வரையும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ செலவாக 7.5 லட்சம் ரூபாய் வரையும் காப்பீட்டுத் தொகையை கிளைம் செய்ய முடியும். இந்த சேவை ஆன்லைனில் டிக்கெட் வாங்கினால் மட்டுமே கிடைக்கும். வெறும் 30% பயணிகள் மட்டுமே இத்திட்டத்தை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான இந்தூர் - பாட்னா ரயிலில் சென்ற 128 பேர் காப்பீடு செய்துள்ளனர். அதில் 78 பேர் மட்டும் விபத்து நடக்கும்போது ரயிலில் இருந்துள்ளனர்.
எதிர்பாராமல் நடப்பது தான் விபத்து. ஆனால் மக்களும் ரயில்வே ஊழியர்களும் விழிப்புடன் இருப்பது அவசியம். அதுதான் நாட்டுக்கும் நல்லது நமக்கும் நல்லது.

- ரெ.சு.வெங்கடேஷ்
இன்ஃபோகிராப்: ஆரிஃப் முகமது, நிஜார் முகமது
Dailyhunt

ரூ.25 லட்சம் செல்லாத நோட்டுகள் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: வங்கி மேலாளர்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது

சென்னை,

சென்னையில் ரூ.25 லட்சம் செல்லாத நோட்டுகள் கொள்ளை போன வழக்கில் திடீர் திருப்பமாக வங்கி மேலாளர்கள் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ரூ.25 லட்சம் கொள்ளை

சென்னை அடையார் சாஸ்திரி நகர் 1-வது அவென்யூவில் ‘ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்’ என்ற வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக லோகேஸ்வரராவும், காசாளராக இளங்கோவனும் பணியாற்றி வந்தனர்.

செல்லாத நோட்டுகளை மாற்றி பொதுமக்களுக்கு வினியோகிப்பதற்காக ரிசர்வ் வங்கி இந்த வங்கி கிளைக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள ரூ.2 ஆயிரம், ரூ.100 நோட்டுகளை வழங்கி இருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி அனுப்பிய நோட்டுகளை பொதுமக்களுக்கு முறையாக வினியோகிக்காமல் வங்கியின் காசாளர் இளங்கோவன் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது. தனக்கு தெரிந்த தொழில் அதிபர்கள் பதுக்கி வைத்திருந்த செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றிக் கொடுத்தார்.

அந்த வகையில் ரிசர்வ் வங்கி கொடுத்த ரூ.50 லட்சம் பணத்தில் ரூ.37 லட்சம் அளவுக்கு முறைகேடாக தொழில் அதிபர்களுக்கு மாற்றிக்கொடுத்துள்ளார். முறையாக ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை வாங்காமல் ரூ.37 லட்சம் பணத்தையும் இளங்கோவன் மாற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. வங்கி மேலாளர் லோகேஸ்வரராவ் இந்த முறைகேட்டை கண்டுபிடித்துவிட்டார். இதையடுத்து காசாளர் இளங்கோவன் தனக்கு கிடைத்த கமிஷன் தொகையில் மேலாளர் லோகேஸ்வரராவுக்கும் பங்கு கொடுத்து சரிக்கட்டி உள்ளார்.

குறுக்கு வழி

முறைகேடாக மாற்றி கொடுத்த ரூ.37 லட்சம் பணத்தையும் வங்கியில் மீண்டும் திருப்பி வைப்பதற்கு மேலாளர் லோகேஸ்வரராவும், காசாளர் இளங்கோவனும் திட்டம் தீட்டினார்கள்.

இளங்கோவன் தனிப்பட்ட முறையில் தன்னுடைய காரை ஓட்டுவதற்காக சக்திவேல் என்ற டிரைவரை பணியில் அமர்த்தி இருந்தார். முறைகேடாக கொடுக்கப்பட்ட ரூ.37 லட்சம் பணத்தில், ரூ.25 லட்சம் பணத்தை வங்கியில் திருப்பி வைப்பதற்கு முதற்கட்டமாக முடிவு செய்தனர்.

தொழில் அதிபர்களிடம் வாங்கிய செல்லாத ரூ.25 லட்சம் மதிப்பிலான 1,000 ரூபாய் நோட்டுகளை குறுக்கு வழியில் மாற்றுவதற்கு டிரைவர் சக்திவேல் உதவி செய்வதாக கூறினார். தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்க்கும் முகேஷ் என்பவரும், ஊழியர் மணிகண்டன் என்பவரும் செல்லாத ரூ.25 லட்சம் பணத்தை மாற்றுவதற்கு உதவி செய்வார்கள் என்று சக்திவேல் தெரிவித்தார்.

முகேசும், மணிகண்டனும் பல்லாவரத்தில் உள்ள ராணுவ மைதானத்துக்கு ரூ.25 லட்சம் பணத்தை கொண்டு வந்தால், அவற்றிற்கு ரூ.2 ஆயிரம் நல்ல நோட்டுகள் தருவதாக கூறினார்கள்.

ரூ.25 லட்சத்தையும் நல்ல நோட்டுகளாக மாற்றிக்கொடுக்க ரூ.4 லட்சம் கமிஷன் கேட்டுள்ளனர். கமிஷன் தொகை தருவதற்கு ஒப்பு கொள்ளப்பட்டது.

திட்டப்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு இளங்கோவன் தனது காரில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள செல்லாத 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து சென்றார். சக்திவேல் காரை ஓட்டினார். அவர்கள் பல்லாவரம் ராணுவ மைதானத்தில் ரூ.25 லட்சம் பணத்துடன் காத்திருந்தார்கள்.

கொள்ளை

அப்போது அங்கு இன்னொரு காரில் வந்த 4 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி இளங்கோவன் வைத்திருந்த ரூ.25 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

முறைகேடாக மாற்றுவதற்கு முயற்சித்த ரூ.25 லட்சம் பணமும் கொள்ளைப் போனதால் இளங்கோவன் கடும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது பற்றி மேலாளர் லோகேஸ்வரராவுக்கு தகவல் கொடுத்தார். இரவோடு, இரவாக சாஸ்திரி நகரில் உள்ள தங்களது வங்கியின் கிளை அலுவலகத்துக்கு இளங்கோவனும், லோகேஸ்வரராவும் வந்தனர். அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என்று யோசித்தப்படி இருந்தனர். டிரைவர் சக்திவேல் வங்கியின் வெளியே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சாஸ்திரிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ரோந்து வந்தார். அவர் சக்திவேலை பிடித்து விசாரித்தார். வங்கி அலுவலகத்துக்குள் சந்தேகத்துக்கிடமாக இருந்த லோகேஸ்வரராவ் மற்றும் இளங்கோவனிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது ரூ.25 லட்சம் செல்லாத நோட்டுகள் கொள்ளைப் போன விஷயம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கமிஷனர் உத்தரவு

ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் அன்பு ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், செல்லப்பா, ஆனந்த் பாபு ஆகியோர் அடங்கிய 3 தனிப்படைகள் கொள்ளையர்களை பிடிக்க களத்தில் இறக்கப்பட்டனர்.

பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலுக்கு தலைவனாக பல்லாவரத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் செயல்பட்டது தெரிய வந்தது. ராஜேஷ் திருச்சிக்கு தப்பி ஓடி விட்டதாக தெரிய வருகிறது. அவரையும், அவரது கூட்டாளிகள் 3 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் திருச்சி விரைந்தனர்.

வங்கி ஊழியர்கள் கைது

இதற்கிடையில் பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டிய பணத்தை முறைகேடாக தொழில் அதிபர்களுக்கு மாற்றிக்கொடுத்து சட்ட விரோத செயலில் ஈடுபட்ட வங்கி மேலாளர் லோகேஸ்வரராவ், காசாளர் இளங்கோவன், அவரது டிரைவர் சக்திவேல், தனியார் வங்கி மேலாளர் முகேஷ், ஊழியர் மணிகண்டன் ஆகிய 5 பேரும் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

போலீசாரின் நடவடிக்கை இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே செல்லாத நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கி ஊழியர்கள் கமிஷன் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

இந்த வழக்கின் மூலம் வங்கி ஊழியர்கள் முறைகேடாக செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைதான 5 பேரும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற காவலில் அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

முகத்தை மூடியபடி...

கைதான 5 பேரையும் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவர்களை படம் பிடிப்பதற்காக சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்துக்கு வெளியே ஏராளமான புகைப்படக்காரர்கள் கூடி நின்றனர். ஆனால் படம் எடுக்க விடாதபடி கைதானவர்களின் முகத்தை மூடியபடி போலீசார் ஜீப்பில் ஏற்றினார்கள். அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டி இருப்பதாலும், மேலும் பணத்தை கொள்ளையடித்த 4 பேரையும் கைது செய்ய வேண்டி இருப்பதாலும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை என்று போலீசார் கூறினார்கள்.

கள்ளப்பண கொள்ளையர்கள்

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கு பிறகு பணத்தை மையமாக வைத்து நடந்த குற்றங்கள் வெகுவாக குறைந்தன.

தொழில்ரீதியாக திருடுபவர்கள் தங்களது தொழிலை கொஞ்ச காலத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் முறைகேடாக கள்ளப்பணத்தை மாற்றுபவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் புதிய கள்ளப்பண கொள்ளை கும்பல் உருவாகி உள்ளது.

வங்கி ஊழியர்களும், தரகர்களும் இந்த கள்ளப்பண கும்பலோடு கைக்கோர்த்து செயல்படும் நிலை உருவாகி உள்ளது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Court mitigates bus conductor’s punishment

  • SPECIAL CORRESPONDENT
Can a government bus conductor be dismissed from service for having misappropriated Rs.27.50 by not issuing ticket to one of the passengers? No, says the Madras High Court Bench here which has modified the punishment to stopping two increments in salary with cumulative effect.

The order was passed on a writ appeal preferred by M. Kanniyappan who had served as a bus conductor for Tamil Nadu State Transport Corporation (TNSTC) for over 26 years since 1975, before being terminated from service on August 2, 2001 on the charge of having received Rs.55 from two passengers, but issuing only one ticket to them during their travel from Tiruchi to Madurai on September 28, 2000.
Three checking inspectors of TNSTC had caught the conductor red-handed at Melur near here. Though the passengers made a written statement accusing the conductor of issuing them only one ticket despite receiving money for two, the appellant reportedly refused to counter sign the statement leaving the checking inspectors with no choice but to get it attested by the bus driver before initiating an inquiry. Then, the conductor denied the allegation against him.

Pointing out that the appellant had been waging a legal battle for the last 16 years and in the meantime he had attained the age of superannuation, the Division Bench modified his punishment to stoppage of two increments.

Says dismissal from service for misappropriating Rs. 27.50 is disproportionate to the charge



டிசம்பர் மாத சம்பளத்தை 2000 ரூபாய்களை வைத்து சமாளிக்க முடியுமா?
நவம்பர் 8-ம் தேதி முதல் நம் அன்றாட வாழ்க்கையே மாறிவிட்டது. வாரத்திற்கு சில மணி நேரங்கள் வங்கிக்கும், ஏடிஎம்முக்கும் ஒதுக்க தொடங்கியிருக்கிறோம். கார்டு ஏற்கும் கடைகள், 2000 ரூபாய் ஏற்கும் ஹோட்டல்களை தேடிச் செல்கிறோம். பார்க்கிங்கில் வணக்கம் வைக்கும் காவலாளிக்கும், சிக்னலில் கையேந்தும் குழந்தைகளுக்கும் காசு தர யோசிக்கிறோம். டீக்கடைகளில் அக்கவுண்ட் ஆரம்பித்திருக்கிறோம். பர்ஸில் பத்து நோட்டுகளுக்கு மேல் வைப்பது சிரமமாக இருப்பதால் சீக்ரெட் லாக்கர் ஒன்றை உருவாக்கியிருக்கிறோம். இதையெல்லாம் சமாளித்தாகிவிட்டது. இன்னும் சில தினங்களில் புது மாதம் பிறக்கவிருக்கிறது. கடந்த சில நாட்களாக நாம் சந்திக்காத பல செலவுகள் அப்போது வரும்.

அதையெல்லாம் கேஷ் இல்லாமல் சமாளித்து விட முடியுமா?

ஒரு நடுத்தர குடும்பத்தின் செலவுகளை யோசித்து பாருங்கள். 35000 மாத செலவு செய்யும் ஒரு குடும்பத்தின் செலவுகளை இப்படி பிரிக்கலாம்.

கடன்களுக்கான இ.எம்.ஐ - 5000

வீட்டு வாடகை - 10000

மொத்த மளிகை செலவுகள் -4000

மின்சாரம் -1000

பெட்ரோல் அண்ட் டீசல்-1000

வாகன பராமரிப்பு-300

பள்ளி கல்லூரி கட்டணங்கள்-2000

பஸ் அல்லது ரயில் பாஸ்-500

கேபிள் மற்றும் பத்திரிகைகள்-400

கேஸ் -500

ஃபிட்னெஸ் செலவுகள் -200

பியூட்டி & பர்சனல் கேர் -300

ரெகுலர் மருந்துகள்-500

குடி தண்ணீர் கேன்கள்-200

உடைகள்-1000

தினசரி காய்கறிகள் -2000

ஸ்நாக்ஸ் - 1000

காலணிகள்-300

ஃபேமிலி / லவ்வரோடு சினிமா -1000

சிகரெட் & புகையிலைப் பொருட்கள், மது - 1500

இதில் எதையெல்லாம் உங்களால் ஆன்லைனில் செய்ய முடியும்? வாடகையை செக்காக தந்தால் ஓனர் ஏற்பாரா? காய்கறிக் கடைக்காரர், பால்காரர் காசு தானே கேட்பார்? பைக் பஞ்சர் ஆனால் கிரெடிட் கார்டு ஒட்டாது. முடி வெட்ட முந்நூறு ரூபாய் தர தயாராய் இருந்தால் பிரச்னை இல்லை. 80 ரூபாய் சில்லறையாய் இருந்தால் மட்டுமே முனைக்கடையில் வெட்ட முடியும். சிகரெட்/மது பழக்கம் இருந்தால் ஆரோக்கியம் தாண்டி இன்னும் சில பிரச்னைகளும் உண்டு. எப்படி பார்த்தாலும் 20000 ரூபாய் கேஷ் வேண்டும். இதை ஏடிஎம்மில் 2000, 2000 ரூபாயாக எடுத்து தீராது. வங்கிக்கு சென்றே ஆக வேண்டும். ஆனால், வேலை நாட்களில் வங்கிக்கு செல்ல நேர்ந்தாலே பர்மிஷன் எடுக்க வேண்டும். இந்த நிலையில் இரண்டு நாட்களாவது லீவு எடுத்தால் தான் மாத துவக்கத்தில் வங்கியில் சாத்தியம் ஆகும். மாத துவக்கத்தில் எல்லோருக்குமே 100 ரூபாய் தாள்களாக தேவைப்படும். வங்கியில். 2000 ரூபாய் நோட்டை வாடகைக்கு மட்டுமே தர முடியும். ஒட்டு மொத்த மாத சம்பளக்காரர்களும் வங்கியை நோக்கி படையெடுத்தால்? டிஜிட்டலாக மாற்றுகிறோம் என எல்லா வசதிகளையும் மொபைல் ஆப்பிலே தந்துவிட்டு, வங்கியில் ஆட்களை குறைத்து விட்டார்கள். சில நிறுவனங்கள் வங்கிகளின் என்ணிக்கையே குறைத்து விட்டார்கள்.

வரும் ஒன்றாம் தேதியை எப்படி சமாளிப்பது என இப்போதே யோசியுங்கள். வீட்டு ஓனரிடம் பான் கார்டு எண் கேளுங்கள். செக் அல்லது ஆன்லைன் டிரான்ஸ்ஃபர்தான் சாத்தியம் என்பதை சொல்லுங்கள்.

பால்காரரிடம் பேசுங்கள்.

மெடிக்கல் ஷாப்பில் சின்னச் சின்ன தொகைக்கு கார்டு வாங்க மாட்டார்கள். மொத்தமாக வாங்க திட்டமிடுங்கள்.

வீட்டில் வேலை செய்பவர்கள் யாராவது இருந்தால் அவருக்கு என்ன செய்வது என யோசியுங்கள்.

சிலர் வீட்டுக்குத் தெரியாமல் வயதான அப்பா, அப்பாவுக்கு பணம் தருபவர்களாக இருப்பீர்கள். அதற்கு முதலில் இப்போதே பணத்தை எடுத்து வையுங்கள்.

பள்ளி/கல்லூரி படிக்கும் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு தினமும் தரும் பாக்கெட் மணியை எப்படி தரலாம் என கேளுங்கள்.

எப்படியும் கேபிள் டிவிகாரர் சில்லறையாகத்தான் கேட்பார்.

150 ரூபாய் டிரெயின்/ பஸ் பாஸுக்கு கார்டு வாங்க மாட்டார்கள். நம்மை மட்டும்தான் மாற சொல்லும் அரசு. அதற்கு ஒரு தொகை எடுத்து வையுங்கள்.

மிசோராம் மக்கள் பணத்துக்கு மாற்றாக பேப்பரில் கைகளால் எழுதி பயன்படுத்துகிறார்கள். அதெல்லாம் இங்கே நடக்காது.உங்கள் வங்கி கணக்கில் 20000 ரூபாய் இருந்தால், இப்போதே எடுத்து வந்து விடுங்கள். இல்லையேல் மாத துவக்கத்திலே பல பேரிடம் திட்டு வாங்க நேரிடும். அப்போது 'நாட்டுக்காக சில திட்டுகள் வாங்கலாம்' என எந்த அமைச்சராவது அறிக்க விட்டிருக்கக்கூடும். அதுதான் அதிகமாக வலிக்கும்.

- கார்க்கிபவா

Dailyhunt

சந்தேகம் சரியா 10: பல்லி விழுந்த உணவு விஷமா?

டாக்டர் கு. கணேசன்
ஓவியம்: வெங்கி
பல்லி விழுந்த பால் அல்லது உணவை உட்கொண்டால் அது விஷமாகிவிடும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

உண்மையில்லை. பல்லிகளில் ஒரு சில இனங்களே விஷமுள்ளவை. நம் வீடுகளில் உலவுகிற பல்லிகளுக்குத் துளியும் விஷமில்லை. இருந்தாலும் இவற்றின் உடலில் சால்மோனெல்லா எனும் பாக்டீரியாக்கள் இருக்கச் சாத்தியம் உண்டு. பல்லி விழுந்த உணவில் இவை கலந்து, அந்த உணவை நஞ்சாக்கிவிடலாம். அப்போது இந்தக் கிருமிகள் வாந்தி, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. என்றாலும், இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து வளர்ந்து, அறிகுறிகள் தெரிய ஒரு வாரம் ஆகும்.

பய வாந்தி

அப்படியானால், “பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள் உடனே வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகச் செய்திகள் வருகின்றனவே! எப்படி?” என்றுதானே கேட்கிறீர்கள்?

இவை பெரும்பாலும் பயத்தாலும், பதற்றத்தாலும் ஏற்படுகின்றன. பல்லி விழுந்த உணவைச் சாப்பிடும்வரை ஒன்றும் தெரிவதில்லை. உணவு காலியாகும்போது பாத்திரத்தின் அடியில் இறந்து கிடக்கும் பல்லியைப் பார்த்ததும்தான் சாப்பிட்டவருக்குப் பயம் தொற்றும்.

“ஐயோ, பல்லி விஷமாச்சே..” என்று மனம் பதறும். “உடலுக்கு ஏதாவது கேடு செய்துவிடுமோ” என்று பீதி கிளம்பும். இந்த மனரீதியிலான அழுத்தத்தின் விளைவாகத்தான் வாந்தியும் மயக்கமும் வருகின்றன. அதிலும் பள்ளிகளிலும் விடுதிகளிலும் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் பயந்து மொத்தக் குழந்தைகளும் வாந்தி எடுப்பார்கள்.

நேரடி அனுபவம்

இந்த இடத்தில் என் அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொள்கிறேன். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக நான் பணிபுரிந்த காலம். ஒரு சிறுவர் பள்ளியில் மதியச் சாப்பாட்டில் பல்லி விழுந்துவிட்டதாகவும் அதைச் சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுப்பதாகவும் அழைத்துவந்திருந்தனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளைக் கொடுத்த பிறகு, ஆசிரியையிடம் விசாரித்தேன்.

“மதிய உணவைச் சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து, குழந்தைகள் வாந்தி எடுத்தார்கள்?” என்று கேட்டேன். “ஒரு மணி நேரம் கழித்து” என்றவர், “எல்லாக் குழந்தைகளும் உணவைச் சாப்பிட்ட பிறகு, அந்தப் பாத்திரத்தைத் தேய்க்க வந்த ஆயாதான், பல்லி விழுந்து இறந்த செய்தியைச் சொன்னார்கள். இந்தச் செய்தி குழந்தைகளுக்கு எட்டியதும்தான் ஒவ்வொரு குழந்தையாக வாந்தி எடுக்க ஆரம்பித்தது” என்றார்.

“மதிய உணவைச் சாப்பிட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் வாந்தி வந்ததா?” எனக் கேட்டேன். “இல்லை, கடைசியாகச் சாப்பிட்ட மாணவன் மட்டும் வாந்தி எடுக்கவில்லை” என்றார். “ஏன்?” எனக் கேட்டேன். “அவன் சாப்பிட்டதும் வீட்டுக்குப் போய்விட்டான். அவனுக்கு உணவில் பல்லி விழுந்த விஷயம் தெரியாது!” என்றார்.

அவனை வரவழைத்தேன். அதுவரை வாந்தி எடுக்காதவன் நண்பர்களைப் பார்த்ததும், தான் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்த விஷயம் தெரிந்ததும், தனக்கும் ஏதாவது ஆகியிருக்குமோ எனப் பயந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தான். பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் வருவது எல்லாமே மனப் பிரமை என்று இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்!

பின் குறிப்பு: பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட உணவை சாம்பிள் எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பினேன். ஒரு வாரம் கழித்து ‘அதில் எந்தவித விஷமும் இல்லை’ என்று ரிப்போர்ட் வந்தது.

உணவைப் பாதுகாப்பாக மூடி வைத்திருக்க வேண்டியதும், வீடு, அலுவலகம் பள்ளி, விடுதி, சமையலறை போன்றவை சுத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். அப்போதுதான் பல்லிகளின் வருகையைத் தவிர்க்க முடியும்.

காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில் ஸ்மார்ட் போன் மூலம் காய்கறி வாங்கலாம்: இந்தியன் வங்கி புது வசதி

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக் கப்பட்ட இரு கிராமங்களில் ஸ்மார்ட் போன் மூலம் காய்கறி வாங்கும் வசதியை இந்தியன் வங்கி ஏற்படுத்தியுள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து மக்களிடையே பணத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக 100, 50, 20, 10 ஆகிய ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சிறு மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள், சில்லறை காய்கறி கடைகளின் விற் பனை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.

இதற்கு தீர்வு காணும் வகையில் இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள இரு கிராமங்களில் ‘ஸ்கேன் அண்டு பே’ என்ற திட்டத்தை பிரபலப்படுத்தி வருகிறது. இது பொதுமக்கள் மற்றும் சிறுவணிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக இந்தியன் வங்கியின் காஞ்சிபுரம் மண்டல (திருவள்ளூர் மாவட்டம் உள்ளடங்கியது) மேலாளர் பி.சண்முகநாதன் கூறியதாவது:

காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள 20 லட்சம் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களில் 50 ஆயிரம் பேர் நெட் பேங்கிங் வசதியை பெற்றுள்ளனர். இதில் 18 ஆயிரம் பேர் இந்தியன் வங்கியின் இன்ட்பே (IndPay) என்ற செயலியை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது நிலவும் சில்லறை பிரச்சினையால், அந்த செயலியை தினமும் புதிதாக சுமார் 200 பேர் பதிவிறக்கி வருகின்றனர்.

முன்னதாக மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, இந்தியன் வங்கி சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரக்காட்டுப்பேட்டை, திருவள் ளூர் மாவட்டத்தில் கல்பாக்கம் ஆகிய இரு கிராமங்களை தத்தெடுத்திருக்கிறோம். இந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் ஜன்தன் திட் டத்தின் கீழ் வங்கி கணக்கை தொடங்கி, ஏடிஎம் கார்டுகளை கொடுத்திருக்கிறோம்.

தற்போதுள்ள சூழலில் வியா பாரிகளுக்கும், பொதுமக்களுக் கும் உதவ, அக்கிராமங்களில் உள்ள வணிகர்களுக்கு கியூஆர் கோடு உருவாக்கி கொடுத்து வருகிறோம். ஒரு வியாபாரி எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும், அவர்கள் வங்கி கணக்கு எண் மற்றும் ஐஎப்எஸ்சி கோடு ஆகியவற்றை இந்தியன் வங்கியில் கொடுத்தால் சில நிமிடங்களில் அவர்களுக்கு கியூஆர் கோடு வழங்கப்படும்.

ஸ்மார்ட் போனில் இன்ட்பே செயலி வைத்திருக்கும் இந்தி யன் வங்கி வாடிக்கையாளர் ஒருவர், கியூஆர் கோடு உள்ள கடையில், சிறிய தொகைக்கு பொருட்களை வாங்கிக்கொண்டார் என்றால், அவர் செயலியினுள் நுழைந்து, ஸ்கேன் அன்டு பே என்ற வசதியை சுட்டி, 4 இலக்க கடவுச் சொல்லை வழங்கி, பணம் செலுத்தலாம். அந்த பணம் வியாபாரியின் கணக்கில் உடனே சென்று சேர்ந்துவிடும். அதற்கான குறுஞ்செய்தி இருவ ரது கைபேசிக்கும் செல்லும். இதை ஸ்கேன் அன்டு பே சேவை என்கிறோம்.

இந்த 2 கிராமங்களில் தற் போது 30-க்கும் மேற்பட்ட வணிகர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். மேலும் பலர் அந்த சேவையை வழங்கக் கோரி எங்களை அணுகி வரு கின்றனர். இது பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வசதியை மேலும் பல கிராமங்களுக்கு விரிவுபடுத்த இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

திருமண வீட்டாருக்கு நாளை முதல் ரூ.2.5 லட்சம்: வங்கி அதிகாரி தகவல்

திருமண வீட்டார் தங்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சத்தை பெறும் நடைமுறை நாளை அல்லது நாளை மறுநாள் அமலுக்கு வரும் என்று வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.

பணத் தட்டுப்பாட்டால் திருமண வீட்டார், விவசாயி கள், வியாபாரிகள் பாதிக்கப் படுவதாக மத்திய அரசிடம் புகார்கள் குவிந்தன. இதைத் தொடர்ந்து திருமண வீட்டார் தங்களின் செலவுக்காக வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய நிதியமைச்சகம் கடந்த 17-ம் தேதி அறிவித்தது.

அதன்படி தந்தை அல்லது தாயார் அல்லது மகன் அல்லது மகள் ஆகியோரின் வங்கிக் கணக்கில் இருந்து இந்தத் தொகையை எடுக்கலாம். இதற்காக திருமண பத்திரிகை, சொந்த உறுதிமொழி கடிதம், பான் எண் விவரங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர் உஷா அனந்த சுப்பிரமணியன் கூறியதாவது:

திருமண வீட்டாருக்கு ரூ.2.5 லட்சம் வழங்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். ரிசர்வ் வங்கி சொல்லாமல் எதுவும் செய்ய முடி யாது. திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வழிகாட்டு நெறிகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதைத்தொடர்ந்து திருமண வீட்டார் தங்கள் வங்கிக் கணக் கில் இருந்து ரூ.2.5 லட்சத்தை எடுக்கும் நடைமுறை அமலுக்கு வரும். மணமகன், மணமகள் வீட்டார் தனித்தனியாக வங்கி களில் விண்ணப்பித்து தலா ரூ.2.5 லட்சம் பெறலாம்.

குழந்தைகளிடம் பெற்றோர்கள் அதீத எதிர்பார்ப்பு வைக்கக்கூடாது: உளவியல் நிபுணர் விருதகிரிநாதன் அறிவுரை


பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதீத எதிர்பார்ப்புகளை வைக் கக்கூடாது. அது குழந்தைகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத் தும் என்று பிரபல நரம்பியல் மருத்துவ உளவியல் நிபுணர் பி.எஸ்.விருதகிரிநாதன் தெரி வித்தார்.

நிகேதன் பள்ளி குழுமம் மற்றும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆகியவை இணைந்து ‘குழந்தைகளின் இளமை பருவம் மற்றும் பெற்றோரின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் வண்டலூரில் நேற்று ஒரு கருத்தரங்கத்தை நடத்தின.

இந்த கருத்தரங்கில் பிரபல நரம்பியல் மருத்துவ உளவியல் நிபுணர் பி.எஸ்.விருதகிரிநாதன் பேசியதாவது:

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். எனவே, ஒரு குழந்தையோடு மற்றொரு குழந்தையை ஒப்பிட்டு பேசுவது அவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். பெரும் பாலான பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதீத எதிர்பார்ப்பு களை வைக்கின்றனர். இது குழந்தைகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். சில குழந்தைகள் ஆரம்பத்திலேயே இடது கையால் எழுதுவார்கள். அப்படி இடதுகைப் பழக்கம் உள்ள குழந்தைகளை, சிலர் வற்புறுத்தி வலது கைப் பழக்கத்துக்கு மாற்ற முயற்சிப்பார்கள். அது தவறு. ஏனெனில், இடதுகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு, வலது மூளைதான் மொழி அறிவுக்கானது. அதை மாற்ற முயற்சிக்கும்போது, மூளையில் குழப்பம் ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய ஊட்டச்சத்து அறிவியல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வர்ஷா பேசும்போது, “இளம் வயதில் குழந்தைகள் சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுவதற்கு நாம் பழக்கப்படுத்த வேண்டும். வீட்டுப் பாடங்கள் இருக்கிறதே என்பதற்காக இரவில் அவர்களை அதிக நேரம் கண் விழித்து படிக்க அனுமதிக்க கூடாது. மேலும், காலை உணவை குழந்தைகளுக்கு அளிப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே அவர்களை படுக்கையிலிருந்து எழுந்திருக்க வைப்பது நல்லது. அதிக சர்க்கரை, உப்பு கொண்ட உணவு பொருள்களை குழந்தைகளுக்கு அளிப்பதை தவிர்க்க வேண்டும்” என்றார்.

இடது கை பழக்கம்

தி லேனர்ஸ் கான்ஃப்லூயன்ஸ் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ஏ.செந்தில் குமரன் பேசும்போது, “தற்போது இந்தியாவில் மாணவர்களை மதிப்பிட கிரேடு முறை உள்ளது. ஆனால், இனிவரும் காலங்களில் செயல்வழி கல்வி முறை முக்கியத்துவம் பெறும். பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிடுவதோடு, தங்களின் கடமை முடிந்து விடுவதாக கருதக்கூடாது. அவர்களுடன் போதிய அளவு நேரத்தை செலவிட வேண்டும். குழந்தைகளிடம் இருக்கும் திறமைகள், குறைபாடுகளைப் புரிந்துகொள்ளாமல், பெற் றோர்கள் தங்களின் விருப்பங்களை அவர்கள் மேல் திணிக்கக் கூடாது” என்றார்.

இந்த கருத்தரங்கில் திருவள்ளூர் நிகேதன் பள்ளியின் தாளாளர் விஷ்ணு சரண், மற்றும் ஏராள மான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Sunday, November 20, 2016

வீடு தேடி வரும் ஜியோ சிம்.. ரிலையன்ஸ் அடுத்த அதிரடி !


மும்பை: ரிலையன்ஸ் 4 ஜி ஜியோ சிம் வேண்டியவர்களுக்கு வீட்டிற்கே சென்று விநியோகிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 4ஜி சேவையை நாடு முழுவதும் தொடங்கியது. இலவச சிம், இலவச கால் அழைப்புகள், இலவச டேட்டா சேவை என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்தது. மேலும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இன்டர்நெட் மற்றும் அழைப்புகள் அனைத்தையும் இலவசமாக கொடுத்துள்ளது. இதனால் மற்ற நெட்வொர்க் சந்தாதாரர்கள் ஜியோ சிம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இதனிடையே 2017ம் ஆண்டு ஜனவரி முதலாக, பீட்டா வெர்ஷனில் ஜியோ சேவைகள் மேம்படுத்தப்பட உள்ளன. சென்னை, கொல்கத்தா, டெல்லி, விசாகப்பட்டிணம், ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பீட்டா சேவையை தொடங்குவதற்கான சோதனை முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக, ரிலையன்ஸ் ஜியோ கூறியுள்ளது.

தற்போது வாடிக்கையாளர்கள் வீடு தேடி ஜியோ 4ஜி சிம் விநியோகிக்க உள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குச் சென்று, வாடிக்கையாளர்கள் தங்களது சிம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம் அல்லது 1800 200 200 9 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சிம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் முகவரிக்கு நேரில் சென்று, அடையாள ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு, 4ஜி சிம் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மதுரை

பெற்றோருக்கு ஜீவனாம்சம் வழங்குவது பிள்ளைகளின் கடமை என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார்.

ஜீவனாம்சம் கேட்ட தாயார்

மதுரையைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

என் தாயார் பொன்.தேவகி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு எங்கள் குடும்பத்தினரைவிட்டு பிரிந்து சென்றார். இதன்பின்பு

என் தந்தை இறந்துவிட்டார். தற்போது நான், தம்பி ராஜகுமாரன், தங்கை இளமதி ஆகியோர் தனித்தனியாக வசித்து வருகிறோம். எங்களிடம் ஜீவனாம்சம் கேட்டு தாயார் மதுரை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, நானும், தம்பியும் தலா ரூ.3 ஆயிரமும், தங்கை ரூ.5 ஆயிரமும் மாதந்தோறும் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ரத்து செய்ய வேண்டும்

ஆனால் என் தாயார், எங்கள் அப்பாவை மதித்து நடக்கவில்லை. எங்களிடம் போதிய அக்கறை காட்டவில்லை. அவர் வீட்டை விட்டுச் சென்றதால் தான் என்னுடைய தந்தை இறந்தார். பிள்ளைகளை வளர்த்து, நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தித் தர வேண்டியது தாயின் கடமை. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

எனவே, நாங்கள் ஜீவனாம்சம் தர வேண்டும் என கீழ்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்.தேவகி ஆஜராகி, ‘‘தற்போது எனக்கு 70 வயது ஆகிறது. 22 வயது வரை முதல் மகனையும், 14 வயது வரை 2–வது மகனையும் வளர்த்தேன். எனக்கு அங்கு போதிய பாதுகாப்பு இல்லாததால்தான் வீட்டை விட்டு வெளியேறினேன்’’ என்று கூறினார்.

பிள்ளைகளின் கடமை

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

பெற்றோரின் பராமரிப்புக்காக ஜீவனாம்சம் வழங்குவது வாரிசுகளின் கடமை. இதை அவர்கள் செய்யாவிட்டால் அது சட்டவிரோதம். பிள்ளைகளிடம் ஜீவனாம்சம் கேட்க சட்டரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் தாய்க்கு உரிமை உள்ளது. தனது பொறுப்பை பற்றி 2–வது மகன் ராஜகுமாரன் பேசவில்லை. அவர் கனடாவில் நல்ல நிலையில் வசிக்கிறார். மகள் இளமதியின் கணவர் இறந்துவிட்டதால் தற்போது அவர் நல்ல நிலையில் இல்லை. எனவே, இளமதி மாதம் ரூ.3 ஆயிரமும், இளங்கோவன் ரூ.3 ஆயிரமும், கனடாவில் உள்ள ராஜகுமாரன் மாதம் ரூ.15 ஆயிரமும் ஜீவனாம்சமாக அவர்களின் தாயாருக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Madras HC issues arrest warrant against UP officer

CHENNAI: The Madras high court has issued an arrest warrant against the executive officer of Nagarpalika Parishad of Etah district in Uttar Pradesh for his failure to implement court orders pertaining to payment of compensation to the family of a Tamil engineer killed in a road accident involving the parishad's tractor in Uttar Pradesh in 2004.

A division bench of Justice MM Sundresh and Justice MS Ramesh, before which the appeal filed by United India Insurance Company Limited came up for hearing, said: "Though the counsel filed a vakalat on behalf of the executive officer, he has not turned up to assist the court. It is also brought to our notice that even the order passed in the present appeal was not complied with. In such a situation, we are constrained to issue a bailable warrant to the executive officer, Nagarpalika Parishad, Etah district, Uttar Pradesh, ensuring his presence before this court on December 21."

M Pandidurai, aged 48 years, was working as a production officer with Hindustan Lever Ltd (HLL) in Uttar Pradesh. He died in a road accident January 28, 2004 when he was knocked down by a tractor trailer belonging to Etah district Nagar Palika.

The victim's wife, two minor children and his 85-year-old mother lived in Tamil Nadu, and they moved motor accidents claims tribunal in the state for compensation. In August 2007, the tribunal awarded Rs 28.27 lakh as compensation with 7.5% interest from April 2004. As on date the amount is Rs 55.03 lakh.

While the Nagar Palika filed an appeal against the order, the insurance company too filed an appeal saying they were unable proceed with the matter, as the executive officer, Nagarpalika Parishad of Etah district was not evincing interest to appear before the court.

The bench then issued the bailable arrest warrant to protect the interests of the victim's kin, who have been awaiting justice for more than 12 years.

HC permits admission to tainted college

CHENNAI: More than 22 months after three girl students of a naturopathy college in Villupuram were found dead inside a well, triggering protests against the college leading to its temporary closure, the Madras high court gave conditional permission for it to admit students this year.

Counselling for five and half year-long naturopathy and yoga sciences courses which began on November 7, is scheduled to continue till November 30.

Citing this, SVS Educational and Social Service Trust which runs the SVS college, moved the court for a direction to the Tamil Nadu Dr MGR Medical University to send seat matrix to special commissioner and director of Indian medicine and homoeopathy for counseling. It also wanted the directorate to include the institution for counselling.

Justice B Rajendran, before whom the petition came up for hearing, said: "When there are admittedly unfilled seats, no useful purpose will be served in keeping the petitioner's institutions out of the purview of counseling schedule."

In this regard, the judged referred to an order of the first bench of the court on a PIL, holding that affiliation could be granted after inspecting the institution. Similarly, another division bench of the court, passing orders on a writ appeal filed by college, directed the authorities to inspect the college and take a decision on admission of students.
கவுன்சிலிங்கில் எஸ்.வி.எஸ்., கல்லூரி : ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இயற்கை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, எஸ்.வி.எஸ்., கல்லுாரியையும் சேர்க்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே, எஸ்.வி.எஸ்., இயற்கை மருத்துவ கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் படித்த வந்த, மூன்று மாணவியரின் உடல்கள், கல்லுாரி அருகில் உள்ள கிணற்றில் மிதந்தன. 2015 ஜனவரியில், இந்த சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக, கல்லுாரி நிர்வாகி மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கல்லுாரிக்கு வழங்கப்பட்ட இணைப்பை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேட்டு, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, 'நோட்டீஸ்' அனுப்பியது. இயற்கை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங், நவ., 7ல் துவங்கியது; 30ம் தேதி வரை நடக்கிறது. கவுன்சிலிங்கில், எஸ்.வி.எஸ்., கல்லுாரியை சேர்க்கவில்லை. கல்லுாரி தரப்பில் அனுப்பிய முறையீட்டுக்கு, பல்கலையில் இருந்து பதில் வரவில்லை. எனவே, கவுன்சிலிங்கில் சேர்க்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கல்லுாரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதி பி.ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவு: இயற்கை மருத்துவ படிப்பில், இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதை, அரசு தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது. கவுன்சிலிங் பட்டியலில், எஸ்.வி.எஸ்., கல்லுாரியை சேர்க்காததால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. கல்லுாரியை ஆய்வு செய்த பின், பல்கலை இணைப்பு வழங்கலாம் என, ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, கவுன்சிலிங் பட்டியலில், எஸ்.வி.எஸ்., கல்லுாரியை சேர்க்க வேண்டும். கல்லுாரியில் சேரும் மாணவர்களிடம், வழக்கு நிலுவையில் இருப்பதையும், வழக்கின் முடிவைப் பொறுத்து சேர்க்கை அமையும் என்பதையும் கல்லுாரி தரப்பில் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஊழியர்கள் கணக்கில் ரூ.8 கோடி : தனியார் கல்லூரிக்கு 'நோட்டீஸ்'

சென்னை அருகே உள்ள ஒரு கல்லுாரியில், ஊழியர்களின் கணக்கில், முறைகேடாக, எட்டு கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. அந்த தனியார் பொறியியல் கல்லுாரிக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. கடந்த, 8ம் தேதி நள்ளிரவு முதல், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்தன. அவற்றை, வங்கிகளில் கொடுத்து, மக்கள் மாற்றி வருகின்றனர். இதற்கிடையே சிலர், 'பினாமி'களின் வங்கிக் கணக்குகளில், கறுப்புப் பணத்தை செலுத்தி, வருமான வரியில் இருந்து, தப்பிக்க முயற்சிப்பதும் தெரிய வந்தது.அது போன்ற நபர்கள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்திருந்தது.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், செம்மஞ்சேரியில் உள்ள, ஒரு தனியார் பொறியியல் கல்லுாரி, அருகில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில், அதன் ஊழியர்கள் கணக்குகளில், எட்டு கோடி ரூபாய் டிபாசிட் செய்துள்ளது; இது, வருமான வரித்துறை கண்காணிப்பில் தெரிய வந்தது.

இது குறித்து, வருமான வரித்துறையினர் கூறியதாவது:அந்த தனியார் கல்லுாரி, இந்தியன் வங்கிக் கிளையில் உள்ள, 400 ஊழியர்கள் கணக்குகளில், கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்தது. இது, எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதுபற்றி விசாரித்த போது, வருமான வரி ஏய்ப்புக்காக, அவ்வாறு செயல்பட்டது தெரிய வந்தது. அதை தொடர்ந்து, அந்த கணக்குகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆஸி., விசா முறையில் மாற்றம் : இந்தியர்களுக்கு பாதிப்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்க வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் '457 விசா' முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேலை தேடுவதற்காக வழங்கப்படும் கால அவகாசம் 60 நாட்களாக குறைக்கப்பட்டது.ஆஸ்திரேலியாவில், இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் '457 விசா' முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஒருவர் பார்த்து வந்த வேலைக்கான ஒப்பந்த காலம் முடிந்த பின், ஆஸ்திரேலியாவில் இருந்தபடியே புதிய வேலை தேடுவதற்காக 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இது, 60 நாட்களாக குறைக்கப்பட்டது. இந்த கால அவகாசம், கடந்த 2013ல் 28 நாட்களில் இருந்து 90 நாட்களாக உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் குறைக்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் வௌிநாட்டவர்களில் அதிகபட்சமாக இந்தியர்கள் 26.8 சதவீதம் பேர் உள்ளனர். இதற்கு அடுத்ததாக, இங்கிலாந்து 15 சதவீதம், சீனா 6.6 சதவீதம் நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர்.இதுகுறித்து ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறுகையில், ''நவ. 19 முதல், '457 விசா' முறையில் புதிய வேலை தேடுவதற்காக வௌிநாட்டவருக்கு வழங்கப்படும் கால அவகாசம் 60 நாட்களாக குறைக்கப்படும். இதன்மூலம் நேர்முகத்தேர்வில் ஆஸ்திரேலியர்களுக்கும், வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் இடையே போட்டி குறையும். நிறைய ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு சொந்த நாட்டிலேயே வேலை கிடைக்கும்,'' என்றார்.
ரூ.20,000க்கு ரூ.10 நாணயங்கள் வாங்கி சென்ற வாடிக்கையாளர்

புதுடில்லி : வங்கியில் பணம் மாற்ற வந்தவருக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கு, 10 ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டன. டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. டில்லியைச் சேர்ந்த, இம்தியாஸ் ஆலம், பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிகிறார்; அப்பகுதியில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுக்கச் சென்றார். அந்த வங்கியில் வாரத்திற்கு, 24 ஆயிரம் ரூபாய் எடுக்கும் வசதி இருந்தது. நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருந்த இம்தியாசுக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கு, 10 ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டன.

இது குறித்து, இம்தியாஸ் கூறியதாவது: என் வங்கிக் கணக்கில் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுப்பதற்காக, நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருந்தேன். என் முறை வந்தபோது, வங்கி மேலாளர் என்னை அழைத்து, பண இருப்பு இல்லாததால், ரூபாய் நோட்டுகளுக்கு பதில், 10 ரூபாய் நாணயங்களை வழங்குவதாக கூறினார். வேறு வழியின்றி நாணயங் களை பெற்றுக்க கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி உண்டியலில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள்

திருப்பதி;பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டு, நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வந்தபோதிலும், திருப்பதி கோவில் உண்டியல் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள்.
புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள்

இதுகுறித்து கோவிலின் மக்கள் தொடர்பு அதிகாரி தாலரி ரவி கூறுகையில், ''9-ந்தேதியில் இருந்து 10 நாட்களில் உண்டியலில் ரூ.30 கோடியே 36 லட்சம் வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஆன வசூலை விட இது ரூ.8 கோடி அதிகம். ஒரு நாளில் அதிகபட்ச வசூல், கடந்த 17-ந் தேதி வசூலான ரூ.3 கோடியே 53 லட்சம். குறைந்த வசூல் என்றால் 10-ந்தேதி ரூ.2 கோடியே 28 லட்சம் வசூலானதுதான்'' என்று கூறினார்.மேலும், ''இப்போது புதிதாக வெளியாகியுள்ள ரூ.2,000, ரூ.500 நோட்டுகள், பக்தர்களால் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருக்கின்றன'' என்றார்.இங்கு ஒரு ஆண்டுக்கு உண்டியல் ரொக்க பண வசூல் மட்டும் ரூ.1,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

NEET nightmare haunts Tamil Nadu

Lack of clarity on holding the exam puts students in a quandary

With Tamil Nadu taking an aggressive stand against the National Eligibility- cum-Entrance Test (NEET) believing that conducting such an exam for qualification to an MBBS course would put its students at a disadvantage, there seems to be no clarity in how it will be implemented.

The State has to comply with the Supreme Court’s ruling, which means the exam will have to be conducted, but sudden pronouncements by people in government, re-emphasising Tamil Nadu’s stand, has thrown a spanner in the works. Will NEET be held or not is the question practically every class 12 student who wants to pursue medicine next year, and his or her anxious parents, is fretting about.

Every year, Tamil Nadu produces over 5,000 MBBS graduates. The State has one of the highest number of medical colleges in the country with 24 State-run medical colleges (including a college attached to Annamalai University) and an equal number of private/deemed medical institutes, as per the Medical Council of India’s listing.

As far as the State is concerned, it takes into account only an appropriate aggregate of marks scored by the candidate in the Plus Two examination. No entrance tests are conducted for selection into an MBBS/BDS course, and the cut off mark, with the student’s standing in his or her community, will determine the possibility of getting a seat during counselling.

Why NEET?

NEET was conceived as a measure to curb the increasing commercialisation of higher education in medicine, ensure a transparent admission process in private unaided institutions, save students the trouble of writing multiple entrance examinations, and ensure students of merit get a place in medical colleges. Introduced in 2010 through amendments to existing regulations, NEET was struck down by a three-judge Bench of the Supreme Court in 2013. However, the order was recalled this year, paving the way for the test to be held again. Strong protests from Tamil Nadu and a few other States led to a central Ordinance exempting the State quota of seats in government and private medical colleges from being based on NEET for this academic year alone.

Confusion prevailed among students during the admissions process, as private medical college admissions were based on NEET as per the Supreme Court’s directions. The entire process was delayed by more than a month and parents, whose wards were admitted to deemed or private medical colleges, paid at least twice the amount they would have paid last year for the same course. Parents had hoped the State government would conduct counselling for these seats too. But State medical education officials had stayed away maintaining that “they are private colleges and we have nothing to do with them.”

The opposition

Up until 2006, Tamil Nadu had its own entrance exam — the Tamil Nadu Professional Common Entrance Examination — for admission to professional courses, both engineering and medicine. In 2007, the State government decided to do away with it, aiming at equitable access to higher education by basing admissions on class 12 results. NEET, therefore, would invalidate Tamil Nadu’s policy.

In Tamil Nadu, the number of students who take the State Board examinations is 60 times more than that of those studying in CBSE stream. NEET is based on the CBSE syllabus. Experts are concerned about how students from the State will fare in the test. The larger concern is that students from other States could get a bigger proportion of seats in government medical colleges in Tamil Nadu.

For students like E. Sankar’s daughter for instance, NEET could stand in the way of her dream of becoming a doctor. “I earn Rs. 9,000 a month and cannot afford coaching classes. At least the State government’s counselling held some promise, but I am not sure any more,” he rues.

“While there is about a 60 to 65 per cent syllabus match between CBSE and the State Board, the depth of the subjects is dealt with differently – CBSE deals with subjects in more detail,” says Archana Ram, managing director, SMART Training Resources, a career-development company. The questions in NEET would be based on two or more concepts at a time, and conceptual clarity and strength in fundamentals would be required. “Students in Tamil Nadu will have to prepare themselves and orient themselves towards what will be an application-based competitive test rather than a memory-based test which is what they are used to,” she added.

‘Strong case’

Activists G.R. Ravindranath of the Doctor’s Association for Social Equality and P.B. Prince Gajendra Babu of the State Platform for the Common School System, Tamil Nadu, say the State can exercise its right to fight against NEET having made huge strides in medical education. Academically, legally, and as a federal constituent, the State was in a strong position, they pointed out. Hundreds of students from poor and socially backward families were studying medicine, reaping the benefits of the State’s policy.

“Tamil Nadu has a strong case as even the interim order does not refer to the Act — The Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act, 2006 — that the State government passed to abolish entrance exams. Without equity in access, merit has no meaning. With the State having the most number of government medical colleges, a lot is at stake. The seats might end up going to students from other states under NEET. The State should appoint a senior counsel with conviction on social justice and take it up now and not wait for the end of academic year,” says Mr. Babu.

Dr. Ravindranath explains: “NEET is against the constitutional right given by the Supreme Court that every citizen has the right to start a medical college. That is why the government is not interfering in its right to fix fees. If NEET were to be introduced, then the fundamental right guaranteed by the court must be struck down. And that would require a constitutional amendment.”

What next year?

There is still uncertainty over the situation for the coming academic year. Earlier this month, the State School Education Minister said in Delhi that NEET was a certainty, leading to even more confusion as to the State’s status on the test.

Saturday, November 19, 2016

'ஹலோ... பிளாக்கை வொயிட் ஆக்கலாமா...?' சென்னை தொழிலதிபரிடம் போலீஸின் பேரம்

விகடன் நியூஸ்

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவித்த பிறகு நாடு முழுவதும் களேபரங்கள் நடந்து வருகின்றன. கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகளுக்கு 'ஹலோ பிளாக்கை வொயிட்டாக்கலாமா' என்ற போன் கால்கள் அடிக்கடி வருவதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயன்பாட்டில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். இதன்பிறகு நாடுமுழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகள், அஞ்சலகங்கள், கருவூலங்கள் ஆகிய இடங்களுக்கு மக்கள் படையெடுத்தனர்.


ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் குவிந்ததால் பணத்தை மாற்றுவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. செல்லாத ரூபாய் நோட்டுக்களை கையில் வைத்துக் கொண்டு பணத்தேவைகளை சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். ஓட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கைகையும் புரட்டிப் போட்ட இந்த அதிரடி அறிவிப்பை சில மோசடி கும்பல்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன.

ஏழை, எளிய, நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த மக்கள் மட்டுமே பணத்தை மாற்ற வரிசையில் காத்திருந்தனர். ஆனால் லட்சக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள் அதை மாற்ற வங்கிகள் இருக்கும் திசையை கூட எட்டிப் பார்க்கவில்லை. அவர்கள் எப்படி பணத்தை மாற்றி இருக்கிறார்கள் என்று ரகசியமாக களமிறங்கினோம்.

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு கறுப்புப் பணம் வைத்திருக்கும் பண முதலைகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய கறுப்புப் பணத்தை அவர்களால் அரசு விதித்த காலக்கெடுவுக்குள் நேர்மையான வழியில் மாற்ற முடியாது. அவ்வாறு வங்கிகளில் டெபாசிட் செய்தாலும் 200 சதவிகிதம் அபராதம் என்ற அறிவிப்பு பண முதலைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பணத்தை மாற்ற குறுக்குவழிகளை அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதற்காக ஹவாலா கும்பல்கள், புரோக்கர்கள் கமிஷன் அடிப்படையில் பணத்தை மாற்றி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பண முதலைகளிடம் போனில் பேரம் பேசும் இந்த கும்பல் பிறகு அதை குறிப்பிட்ட இடங்களில் மாற்றிக் கொடுக்கின்றனர். இதற்கு 40 முதல் 50 சதவிகிதம் கமிஷனாக பெறப்படுகிறது. கிடைத்தது வரை லாபம் என்று பணமுதலைகளும் பணத்தை மாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.

பணத்தை மாற்றிக் கொடுப்பதாக சொல்லும் இந்த கும்பல், பண முதலைகளுக்கே அல்வா கொடுத்த சம்பவங்களும் உண்டு. பணத்தை ஏமாந்தவர்கள் தேள் கொட்டிய திருடனாக போலீஸில் புகார் கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடிட்டர் கோபாலகிருஷ்ணனிடம் பேசிய கும்பல், 10 லட்சம் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொடுப்பதாக பேரம் பேசியது. பேரம் முடிந்தவுடன் பணத்துடன் சென்ற ஆடிட்டரை மடக்கி பணத்தை திருட முயன்றது அந்த கும்பல். இதுதொடர்பாக கோபாலகிருஷ்ணன், தலைமை செயலக காலனி போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மதன், ஹரி உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்து பணத்தை மீட்டனர்.

இதையடுத்து யானை கவுனி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் செல்வன் என்ற போலீஸ்காரர், வடசென்னையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரு சொகுசு காரை செல்வன் சோதனையிட்டார். அந்த காரில் 10 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. உடனடியாக காரில் இருந்தவரிடம் விசாரித்தார் செல்வன். அப்போது காரில் வந்தவர் பிரபல தொழிலதிபர் என்பது தெரியவந்தது. அவரிடம் பேரம் பேசிய செல்வன், உயரதிகாரிகளிடம் பேசிவிட்டேன், 2 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு செல்லுங்கள். இல்லையென்றால் உங்கள் பணத்துக்கு சிக்கல் என்ற கூறியுள்ளார். இதுகுறித்து தொழிலதிபர், தனக்கு தெரிந்த போலீஸ் உயரதிகாரி ஒருவருக்கு போனில் தகவல் சொன்னவுடன், செல்வனிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த இரண்டு சம்பவங்கள் வெளியில் தெரிந்தவை. ஆனால் வெளியில் தெரியாமல் தினமும் பல சம்பவங்கள் நடப்பதாக விவரம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "பணம் செல்லாது என்ற அறிவிப்பு வந்த நாளிலிருந்து மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் போனில் பணத்தை மாற்றி கொடுப்பதாக சொல்கின்றனர். அதை நம்பி செல்பவர்களிடம் பணத்தை அபகரித்துக் கொண்டு எஸ்கேப் ஆகி விடுகின்றனர். பணத்தை இழந்தவர்கள் புகார் கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் அந்த கும்பல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை. பணமாற்றும் விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு எந்த புகாரும் வரவில்லை. என்றாலும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

எஸ்.மகேஷ்
Dailyhunt

வலையில் சிக்கிய கறுப்பு பண முதலைகள் வருமானவரித்துறையின் அடுத்த டார்க்கெட்


யானை வரும்பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதை போல வங்கிகளில் வருமான வரி உச்ச வரம்பைத் தாண்டி பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள கறுப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் மாற்றி வருகின்றனர். கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கால்கடுக்க காத்திருந்து மக்கள் பணத்தை மாற்றினர். ஒரே நபர் பலமுறை பணம் மாற்றுவதாக ஆர்.பி.ஐக்கு தகவல் கிடைத்ததும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுப்பதில் செக் வைத்தது.
அதாவது, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வருபவர்களின் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என்று அறிவித்தது. அடுத்து 4,500 ரூபாய் வரை பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்ற உச்சவரம்பு தொகை 2000 ரூபாய்எ ன்று குறைக்கப்பட்டது.

மேலும், வங்கிகள், மை இல்லாமல் யாருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற கொடுக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் பல வங்கிகளுக்கு மை வராததால் அவர்கள் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்கவில்லை.இதன்காரணமாக வங்கிக்கு சென்று மக்கள் ஏமாந்தனர்.
இதையடுத்து வங்கி கணக்கில் பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய வாடிக்கையாளர்களை வங்கி அறிவுறுத்தியது. அதன்பேரில் மக்கள், கடந்த மூன்று தினங்களாக வங்கியில் பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்து வருகின்றனர். இதில் வருமானவரி உச்சவரம்பிற்கு மேல் டெபாசிட் செய்பவர்களை வருமானவரித்துறை கண்காணித்து வருகிறது. 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தவர்களின் பட்டியலை தயாரித்த வருமானவரித்துறை அவர்களுக்கு வருமானத்துக்கான ஆதாரத்தையும் அதன் விளக்கத்தையும் சமர்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், '49 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கியில் பணம் செலுத்தினால் கட்டாயம் பான் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும். அதன்படி பழைய ரூபாய் நோட்டுக்களில் 49 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களின் பான் கார்டுகளை ஆய்வு செய்தோம். இந்த மாதத்தில் வருமான வரி உச்ச வரம்பிற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தவர்களின் பான் கார்டு விவரங்களை கண்டறிந்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது. நோட்டீஸில் அவர்கள் டெபாசிட் செய்த பண விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்கு அவர்கள் உரிய வருமான ஆதாரங்களையும், கடந்த 2 ஆண்டுகளாக வருமானவரி தாக்கல் செய்த விவரங்களையும் சமர்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்பிக்கவில்லை என்றால் டெபாசிட் செய்த பணத்துக்கு 200 சதவிகிதம் அபராதமும் பிடிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கறுப்பு பணத்தை மீட்கவே இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது' என்றனர்.
இந்த மாதத்தில் மட்டும் அதிகளவில் பணம் டெபாசிட் செய்த விவரங்களையும் வருமானவரித்துறை சேகரித்து வருகிறது. அவர்களுக்கும் விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது என்றார் வருமானவரித்துறை உயரதிகாரி ஒருவர். வருமானவரித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

- எஸ்.மகேஷ்
Dailyhunt

NEWS TODAY 27.09.2024