Sunday, November 20, 2016

ஊழியர்கள் கணக்கில் ரூ.8 கோடி : தனியார் கல்லூரிக்கு 'நோட்டீஸ்'

சென்னை அருகே உள்ள ஒரு கல்லுாரியில், ஊழியர்களின் கணக்கில், முறைகேடாக, எட்டு கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. அந்த தனியார் பொறியியல் கல்லுாரிக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. கடந்த, 8ம் தேதி நள்ளிரவு முதல், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்தன. அவற்றை, வங்கிகளில் கொடுத்து, மக்கள் மாற்றி வருகின்றனர். இதற்கிடையே சிலர், 'பினாமி'களின் வங்கிக் கணக்குகளில், கறுப்புப் பணத்தை செலுத்தி, வருமான வரியில் இருந்து, தப்பிக்க முயற்சிப்பதும் தெரிய வந்தது.அது போன்ற நபர்கள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்திருந்தது.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், செம்மஞ்சேரியில் உள்ள, ஒரு தனியார் பொறியியல் கல்லுாரி, அருகில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில், அதன் ஊழியர்கள் கணக்குகளில், எட்டு கோடி ரூபாய் டிபாசிட் செய்துள்ளது; இது, வருமான வரித்துறை கண்காணிப்பில் தெரிய வந்தது.

இது குறித்து, வருமான வரித்துறையினர் கூறியதாவது:அந்த தனியார் கல்லுாரி, இந்தியன் வங்கிக் கிளையில் உள்ள, 400 ஊழியர்கள் கணக்குகளில், கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்தது. இது, எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதுபற்றி விசாரித்த போது, வருமான வரி ஏய்ப்புக்காக, அவ்வாறு செயல்பட்டது தெரிய வந்தது. அதை தொடர்ந்து, அந்த கணக்குகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024