காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில் ஸ்மார்ட் போன் மூலம் காய்கறி வாங்கலாம்: இந்தியன் வங்கி புது வசதி
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக் கப்பட்ட இரு கிராமங்களில் ஸ்மார்ட் போன் மூலம் காய்கறி வாங்கும் வசதியை இந்தியன் வங்கி ஏற்படுத்தியுள்ளது.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து மக்களிடையே பணத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக 100, 50, 20, 10 ஆகிய ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சிறு மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள், சில்லறை காய்கறி கடைகளின் விற் பனை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில் இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள இரு கிராமங்களில் ‘ஸ்கேன் அண்டு பே’ என்ற திட்டத்தை பிரபலப்படுத்தி வருகிறது. இது பொதுமக்கள் மற்றும் சிறுவணிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது தொடர்பாக இந்தியன் வங்கியின் காஞ்சிபுரம் மண்டல (திருவள்ளூர் மாவட்டம் உள்ளடங்கியது) மேலாளர் பி.சண்முகநாதன் கூறியதாவது:
காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள 20 லட்சம் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களில் 50 ஆயிரம் பேர் நெட் பேங்கிங் வசதியை பெற்றுள்ளனர். இதில் 18 ஆயிரம் பேர் இந்தியன் வங்கியின் இன்ட்பே (IndPay) என்ற செயலியை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது நிலவும் சில்லறை பிரச்சினையால், அந்த செயலியை தினமும் புதிதாக சுமார் 200 பேர் பதிவிறக்கி வருகின்றனர்.
முன்னதாக மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, இந்தியன் வங்கி சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரக்காட்டுப்பேட்டை, திருவள் ளூர் மாவட்டத்தில் கல்பாக்கம் ஆகிய இரு கிராமங்களை தத்தெடுத்திருக்கிறோம். இந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் ஜன்தன் திட் டத்தின் கீழ் வங்கி கணக்கை தொடங்கி, ஏடிஎம் கார்டுகளை கொடுத்திருக்கிறோம்.
தற்போதுள்ள சூழலில் வியா பாரிகளுக்கும், பொதுமக்களுக் கும் உதவ, அக்கிராமங்களில் உள்ள வணிகர்களுக்கு கியூஆர் கோடு உருவாக்கி கொடுத்து வருகிறோம். ஒரு வியாபாரி எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும், அவர்கள் வங்கி கணக்கு எண் மற்றும் ஐஎப்எஸ்சி கோடு ஆகியவற்றை இந்தியன் வங்கியில் கொடுத்தால் சில நிமிடங்களில் அவர்களுக்கு கியூஆர் கோடு வழங்கப்படும்.
ஸ்மார்ட் போனில் இன்ட்பே செயலி வைத்திருக்கும் இந்தி யன் வங்கி வாடிக்கையாளர் ஒருவர், கியூஆர் கோடு உள்ள கடையில், சிறிய தொகைக்கு பொருட்களை வாங்கிக்கொண்டார் என்றால், அவர் செயலியினுள் நுழைந்து, ஸ்கேன் அன்டு பே என்ற வசதியை சுட்டி, 4 இலக்க கடவுச் சொல்லை வழங்கி, பணம் செலுத்தலாம். அந்த பணம் வியாபாரியின் கணக்கில் உடனே சென்று சேர்ந்துவிடும். அதற்கான குறுஞ்செய்தி இருவ ரது கைபேசிக்கும் செல்லும். இதை ஸ்கேன் அன்டு பே சேவை என்கிறோம்.
இந்த 2 கிராமங்களில் தற் போது 30-க்கும் மேற்பட்ட வணிகர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். மேலும் பலர் அந்த சேவையை வழங்கக் கோரி எங்களை அணுகி வரு கின்றனர். இது பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வசதியை மேலும் பல கிராமங்களுக்கு விரிவுபடுத்த இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment