Sunday, November 27, 2016

 டாக்டர் காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரியில் தேர்வு : அமைச்சர் தகவல்

புதுக்கோட்டை, :''தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும் ஜனவரியில் நடைபெறும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: புதுக்கோட்டையில், 249 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவக் கல்லுாரி கட்டடம் கட்டப் பட்டு வருகிறது. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்தாண்டு, இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதலை பெற்று திறக்கப்படும். வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது.

தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்களின் பணியிடங்கள், அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் ஜனவரியில் தேர்வு நடத்தப்பட்டு, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.உடன் இருந்த, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பதற்கு, மத்திய குழு, ஐந்து இடங்களை பார்வையிட்டு சென்றுள்ளது. இந்த இடங்களில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளில், மத்திய சுகாதாரத்துறை ஈடுபட்டு வருவதாக, தமிழக அரசிற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
                     
: நாணய மூட்டைகளை காலி செய்யும் ரிசர்வ் வங்கி
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம், தன்னிடமுள்ள நாணய மூட்டைகளை காலி செய்து வருகிறது. சில்லறை நோட்டுகளுக்காக வரும் பொது மக்களிடம் தொடர்ந்து நாணயங்களையே விநியோகம் செய்து வருகிறது.

இதுவும், 100, 50 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட ஒருகாரணம் என புகார் எழுந்துள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலங்களில் மட்டுமே மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு நாள்தோறும் 1,500 முதல் 2,000 பேர் வரை வந்து செல்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றவே வருகின்றனர். மேலும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து வருவோரும் இருக்கின்றனர். இந்த நிலையில் அனைவருக்குமே ரிசர்வ் வங்கியானது நாணயங்களை மட்டுமே வழங்கி வருகிறது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறியதாவது:-
ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் எப்போது சில்லறைகள் அதிகளவு கையிருப்பு இருக்கும். செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு, இந்த சில்லறைகளை வாங்குவதற்கான கூட்டம் குறைவாகவே இருக்கும். குறிப்பாக, மாத ஊதியம், ஓய்வூதியம் வாங்கியவர்களில் சிலரே சில்லறைக்காக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு வருவர்.
இதனால், சில்லறை நாணயங்கள் எப்போதுமே கையிருப்பில் அதிகமாக இருக்கும். 5, 10 ரூபாய் நாணயங்கள் போதுமானதாக இருந்தாலும், பொது மக்கள் 10, 20 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வாங்கிச் செல்வது வழக்கமாக இருக்கும். இதனால், நாணயங்கள் தேவைக்கு அதிகமாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில், செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னையைத் தொடர்ந்து அந்த ரூபாய் நோட்டுகளுடனும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுடனும் வருவோருக்கு சில்லறையாக நாணயங்களே விநியோகம் செய்யப்படுகின்றன என அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024