Sunday, November 20, 2016

ரூ.20,000க்கு ரூ.10 நாணயங்கள் வாங்கி சென்ற வாடிக்கையாளர்

புதுடில்லி : வங்கியில் பணம் மாற்ற வந்தவருக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கு, 10 ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டன. டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. டில்லியைச் சேர்ந்த, இம்தியாஸ் ஆலம், பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிகிறார்; அப்பகுதியில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுக்கச் சென்றார். அந்த வங்கியில் வாரத்திற்கு, 24 ஆயிரம் ரூபாய் எடுக்கும் வசதி இருந்தது. நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருந்த இம்தியாசுக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கு, 10 ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டன.

இது குறித்து, இம்தியாஸ் கூறியதாவது: என் வங்கிக் கணக்கில் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுப்பதற்காக, நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருந்தேன். என் முறை வந்தபோது, வங்கி மேலாளர் என்னை அழைத்து, பண இருப்பு இல்லாததால், ரூபாய் நோட்டுகளுக்கு பதில், 10 ரூபாய் நாணயங்களை வழங்குவதாக கூறினார். வேறு வழியின்றி நாணயங் களை பெற்றுக்க கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024