வீடு தேடி வரும் ஜியோ சிம்.. ரிலையன்ஸ் அடுத்த அதிரடி !
மும்பை: ரிலையன்ஸ் 4 ஜி ஜியோ சிம் வேண்டியவர்களுக்கு வீட்டிற்கே சென்று விநியோகிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 4ஜி சேவையை நாடு முழுவதும் தொடங்கியது. இலவச சிம், இலவச கால் அழைப்புகள், இலவச டேட்டா சேவை என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்தது. மேலும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இன்டர்நெட் மற்றும் அழைப்புகள் அனைத்தையும் இலவசமாக கொடுத்துள்ளது. இதனால் மற்ற நெட்வொர்க் சந்தாதாரர்கள் ஜியோ சிம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே 2017ம் ஆண்டு ஜனவரி முதலாக, பீட்டா வெர்ஷனில் ஜியோ சேவைகள் மேம்படுத்தப்பட உள்ளன. சென்னை, கொல்கத்தா, டெல்லி, விசாகப்பட்டிணம், ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பீட்டா சேவையை தொடங்குவதற்கான சோதனை முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக, ரிலையன்ஸ் ஜியோ கூறியுள்ளது.
தற்போது வாடிக்கையாளர்கள் வீடு தேடி ஜியோ 4ஜி சிம் விநியோகிக்க உள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குச் சென்று, வாடிக்கையாளர்கள் தங்களது சிம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம் அல்லது 1800 200 200 9 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சிம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் முகவரிக்கு நேரில் சென்று, அடையாள ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு, 4ஜி சிம் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment