Thursday, November 24, 2016

செயல்படாத அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது: சம்பளக் கமிஷன் பரிந்துரை ஏற்பு

பிடிஐ

திறம்பட செயல்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு தரவேண்டாம் என 7-வது சம்பளக் கமிஷன் அளித்த பரிந் துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி, மத்திய அரசுப் ஊழியர்களின் பணித் திறன் குறிப்பிட்ட அளவுகோலை எட்டா மல் போனால், அவர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்திவைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எச்சரித்துள்ளார்.

7-வது சம்பளக் கமிஷன் பரிந் துரைகள் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கடந்த ஜூலை மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில், சிறப்பாக செயல்படாத அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது குறித்தும் சம்பளக் கமிஷன் பரிந்துரை அளித்திருந்தது.

அதாவது, பணியில் சேர்ந்த 20 ஆண்டுகளில் ஓர் ஊழியர் குறிப்பிட்ட அளவுகோலை எட்ட வில்லை என்றால் வருங்காலத் தில் அவருக்கான வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவற்றை நிறுத்திவைக்கலாம் என சிபாரிசு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக, அரசுப் பணி யாளர்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

இதன் மூலம், செயல்படாத மத்திய அரசு ஊழியர்கள், வரு டாந்திர ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களைப் பெற முடியாது என, அமைச்சர் ஜிதேந்திர சிங் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024