Wednesday, November 30, 2016

நோ..முழு சம்பளம்: இந்தா பிடி...பத்தாயிரம் ரூபாய் - தலைமைச் செயலக காட்சிகள்..

சென்னை தலைமைச் செயலகத்தில் 5500 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களுக்காகவே, தலைமைச் செயலக வளாகத்தில் சில வங்கிகள் இயங்கிவருகின்றன. இன்று சம்பள நாள். தற்போதைய சூழ்நிலைலயில், வங்கி ஏ.டி.எம்-களில் ரூ. 2000 மட்டுமே எடுக்க முடியும் என்பதால், ஊழியர்கள் நேராக வங்கிகளுக்குப் போய் பணத்தை எடுக்க முயன்றனர்.
ஆனால், அங்கே சம்பளப் பணம் முழுவதையும் எடுக்க முடியவில்லை. தலைக்கு ரூ. 10 ஆயிரம்தான் தரமுடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி. தலைமைச் செயலக ஊழியர் சங்க செயலாளர் கணேசனிடம் முறையிட்டனர். அவரும் வங்கித்தரப்பினருடன் பேசியிருக்கிறார்.
வங்கி தரப்பில் சொன்ன தகவல் என்னவென்றால்... "எங்களுக்கு ரிசர்வ் வங்கி தந்ததே...முப்பது லட்சம்தான். நாங்கள்தான், கூடுதலாக வேண்டும் என்று சொல்லி அறுபது லட்ச ரூபாயை வரவழைத்திருக்கிறோம். இந்தப் பணத்தை வைத்து இன்றைய தேதியில் பகிர்ந்துதான் தரமுடியும். 
மேலும் பணம் வந்தால், நிச்சியமாக மீதிப் பணத்தை தருவோம். அதுவும் தவணை முறையாக கூட இருக்கலாம்"  என்று சொல்லிவிட்டர்களாம். பிரதமர் மோடி அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் தலைமைச் செயலக ஊழியர்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024