Sunday, November 20, 2016

கவுன்சிலிங்கில் எஸ்.வி.எஸ்., கல்லூரி : ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இயற்கை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, எஸ்.வி.எஸ்., கல்லுாரியையும் சேர்க்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே, எஸ்.வி.எஸ்., இயற்கை மருத்துவ கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் படித்த வந்த, மூன்று மாணவியரின் உடல்கள், கல்லுாரி அருகில் உள்ள கிணற்றில் மிதந்தன. 2015 ஜனவரியில், இந்த சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக, கல்லுாரி நிர்வாகி மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கல்லுாரிக்கு வழங்கப்பட்ட இணைப்பை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேட்டு, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, 'நோட்டீஸ்' அனுப்பியது. இயற்கை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங், நவ., 7ல் துவங்கியது; 30ம் தேதி வரை நடக்கிறது. கவுன்சிலிங்கில், எஸ்.வி.எஸ்., கல்லுாரியை சேர்க்கவில்லை. கல்லுாரி தரப்பில் அனுப்பிய முறையீட்டுக்கு, பல்கலையில் இருந்து பதில் வரவில்லை. எனவே, கவுன்சிலிங்கில் சேர்க்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கல்லுாரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதி பி.ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவு: இயற்கை மருத்துவ படிப்பில், இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதை, அரசு தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது. கவுன்சிலிங் பட்டியலில், எஸ்.வி.எஸ்., கல்லுாரியை சேர்க்காததால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. கல்லுாரியை ஆய்வு செய்த பின், பல்கலை இணைப்பு வழங்கலாம் என, ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, கவுன்சிலிங் பட்டியலில், எஸ்.வி.எஸ்., கல்லுாரியை சேர்க்க வேண்டும். கல்லுாரியில் சேரும் மாணவர்களிடம், வழக்கு நிலுவையில் இருப்பதையும், வழக்கின் முடிவைப் பொறுத்து சேர்க்கை அமையும் என்பதையும் கல்லுாரி தரப்பில் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

PG med counselling ’24, after delay, from Nov 8

PG med counselling ’24, after delay, from Nov 8  TIMES NEWS NETWORK 02.11.2024 Chennai : PG medical counselling for 2024, which faced signif...