குழந்தைகளிடம் பெற்றோர்கள் அதீத எதிர்பார்ப்பு வைக்கக்கூடாது: உளவியல் நிபுணர் விருதகிரிநாதன் அறிவுரை
பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதீத எதிர்பார்ப்புகளை வைக் கக்கூடாது. அது குழந்தைகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத் தும் என்று பிரபல நரம்பியல் மருத்துவ உளவியல் நிபுணர் பி.எஸ்.விருதகிரிநாதன் தெரி வித்தார்.
நிகேதன் பள்ளி குழுமம் மற்றும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆகியவை இணைந்து ‘குழந்தைகளின் இளமை பருவம் மற்றும் பெற்றோரின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் வண்டலூரில் நேற்று ஒரு கருத்தரங்கத்தை நடத்தின.
இந்த கருத்தரங்கில் பிரபல நரம்பியல் மருத்துவ உளவியல் நிபுணர் பி.எஸ்.விருதகிரிநாதன் பேசியதாவது:
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். எனவே, ஒரு குழந்தையோடு மற்றொரு குழந்தையை ஒப்பிட்டு பேசுவது அவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். பெரும் பாலான பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதீத எதிர்பார்ப்பு களை வைக்கின்றனர். இது குழந்தைகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். சில குழந்தைகள் ஆரம்பத்திலேயே இடது கையால் எழுதுவார்கள். அப்படி இடதுகைப் பழக்கம் உள்ள குழந்தைகளை, சிலர் வற்புறுத்தி வலது கைப் பழக்கத்துக்கு மாற்ற முயற்சிப்பார்கள். அது தவறு. ஏனெனில், இடதுகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு, வலது மூளைதான் மொழி அறிவுக்கானது. அதை மாற்ற முயற்சிக்கும்போது, மூளையில் குழப்பம் ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய ஊட்டச்சத்து அறிவியல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வர்ஷா பேசும்போது, “இளம் வயதில் குழந்தைகள் சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுவதற்கு நாம் பழக்கப்படுத்த வேண்டும். வீட்டுப் பாடங்கள் இருக்கிறதே என்பதற்காக இரவில் அவர்களை அதிக நேரம் கண் விழித்து படிக்க அனுமதிக்க கூடாது. மேலும், காலை உணவை குழந்தைகளுக்கு அளிப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே அவர்களை படுக்கையிலிருந்து எழுந்திருக்க வைப்பது நல்லது. அதிக சர்க்கரை, உப்பு கொண்ட உணவு பொருள்களை குழந்தைகளுக்கு அளிப்பதை தவிர்க்க வேண்டும்” என்றார்.
இடது கை பழக்கம்
தி லேனர்ஸ் கான்ஃப்லூயன்ஸ் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ஏ.செந்தில் குமரன் பேசும்போது, “தற்போது இந்தியாவில் மாணவர்களை மதிப்பிட கிரேடு முறை உள்ளது. ஆனால், இனிவரும் காலங்களில் செயல்வழி கல்வி முறை முக்கியத்துவம் பெறும். பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிடுவதோடு, தங்களின் கடமை முடிந்து விடுவதாக கருதக்கூடாது. அவர்களுடன் போதிய அளவு நேரத்தை செலவிட வேண்டும். குழந்தைகளிடம் இருக்கும் திறமைகள், குறைபாடுகளைப் புரிந்துகொள்ளாமல், பெற் றோர்கள் தங்களின் விருப்பங்களை அவர்கள் மேல் திணிக்கக் கூடாது” என்றார்.
இந்த கருத்தரங்கில் திருவள்ளூர் நிகேதன் பள்ளியின் தாளாளர் விஷ்ணு சரண், மற்றும் ஏராள மான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment