Thursday, November 24, 2016

பாலிடெக்னிக் கல்லூரி முறைகேடு: 524 மாணவர்கள் மீது நடவடிக்கை

கோவை: பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடந்த பருவத்தேர்வின் போது, எழுந்த முறைகேடுகள் தொடர்பாக, 524 மாணவர்கள், இரண்டு முதல்வர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில், தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் என, 529 பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. தற்போது, நடந்து வரும் பருவத்தேர்வுகள், நவ., 26ல் நிறைவடைகிறது. இதில், நடந்த முறைகேடு குறித்து, சென்னையில் நேற்று நடந்த, தேர்வு முறைகேடு நடவடிக்கை குழு கூட்டத்தில் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், 56 கல்லுாரிகளில், 74 செய்முறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுகள், தீவிர கண்காணிப்புடன் மீண்டும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 200 பேருக்கு ஒரு தேர்விலும், 314 பேருக்கு அனைத்து பாடத்தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 மாணவர்களுக்கு இரண்டு பருவம் கல்லுாரிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.முறைகேடுகளுக்கு துணையாகயிருந்த இரண்டு கல்லுாரி முதல்வர்கள் மூன்று ஆண்டுகள் பணிபுரிய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 தொழில்நுட்ப தேர்வு முறைகேடு நடவடிக்கை குழு, மாநில அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு தேர்வு முடிவு சமயங்களிலும், தேர்வு முறைகேடு தடுப்பு குழுவால் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில், நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில், 56 கல்லுாரிகளில் நடந்த, 76 செய்முறை தேர்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டு மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும், 29 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 524 மாணவர்கள் மீது, மூன்று பிரிவுகளின் கீழும், இரண்டு கல்லுாரி முதல்வர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024