Sunday, November 27, 2016

 28வது பட்டமளிப்பு விழா, டிச., 3ம் தேதி காலை, 11:30 மணிக்கு நடைபெற உள்ளது.
சென்னை,:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 28வது பட்டமளிப்பு விழா, டிச., 3ம் தேதி காலை, 11:30 மணிக்கு நடைபெற உள்ளது.

பல்கலை வேந்தர், கவர்னர் வித்யாசாகர் ராவ் தலைமை வகிக்கிறார். சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், மத்திய அரசின் சுகாதாரப் பணிகள் இயக்குனரக தலைமை இயக்குனர், ஜெகதீஷ் பிரசாத் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

விழாவில், மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் சார்ந்த, 20,489 மருத்துவ மாணவ, மாணவியருக்கு, பட்டம் வழங்கப்பட உள்ளது.

மேலும், சாதனை புரிந்த மருத்துவர்களுக்கு, கவுரவ டாக்டர் பட்டம்; வாழ்நாள் சாதனையாளர் விருது; அதிக மதிப்பெண்கள் பெற்ற, 141 மாணவ, மாணவியருக்கு, தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை, கவர்னர் வழங்குகிறார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024