Thursday, November 24, 2016

சான்றிதழில் யார் கையெழுத்து: சென்னை பல்கலையில் குழப்பம்

சென்னை பல்கலையில், நவ., 2ல் பட்டமளிப்பு விழா நடக்க உள்ள நிலையில், பட்ட சான்றிதழில் யார் கையெழுத்திடுவது என, குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
சென்னை பல்கலையின், 159வது பட்டமளிப்பு விழா, டிச., 2ல், பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. கவர்னர் வித்யாசாகர் ராவ், பட்டங்களை வழங்க உள்ளார். 

துணைவேந்தர் இல்லாமல், பட்டமளிப்பு விழா நடத்த பேராசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, பேராசிரியர்கள், உயர் கல்வி அமைச்சரை சந்தித்து முறையிட்டு உள்ளனர். 

இது குறித்து, பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: பட்டமளிப்பு விழா நடத்த, இரு வாரங்களுக்கு முன், அறிவிப்பு வெளியிட வேண்டும். தேர்வுக்குப் பின், மாணவர்கள் எந்த நாட்டிலும் இருக்கலாம். அவர்கள், நேரில் பட்டம் பெற, விசா பெறுவது, டிக்கெட் எடுப்பது என, பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதற்காக, இது போன்ற அவகாசம் வழங்குவது நடைமுறை. தற்போது, ஒரு வார அவகாசத்தில் விழா நடத்தப்படுகிறது. பட்ட சான்றிதழில் துணைவேந்தரும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், கையெழுத்திட வேண்டும். பட்டங்களை வழங்க, துணைவேந்தர் அதிகாரப்பூர்வ புத்தகத்தில் கையெழுத்திட்டு, உத்தரவு பிறப்பிப்பார். இவை பல்கலை மரபுகள்.

 பத்து மாதங்களாக, துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.தற்போது துணைவேந்தருக்கு பதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கையெழுத்தை, பட்ட சான்றிதழில் பதிவு செய்ய, உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இது மரபுகளுக்கு முரணானது. எனவே, துணைவேந்தரை நியமித்த பின், பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும். பல்கலை பட்டமளிப்பு விழா மரபுகளை, ஒரே நாளில் உடைக்க நினைப்பது சரியல்ல.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024