மாநில செய்திகள்
நீட் தேர்வு பயிற்சிக்காக 54 ஆயிரம் கேள்விகளுடன் குறுந்தகடு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
நீட் தேர்வு பயிற்சிக்காக 54 ஆயிரம் கேள்விகளுடன் குறுந்தகடு வழங்கப்படும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஆகஸ்ட் 09, 2017, 05:30 AM
சென்னை,
நீட் தேர்வு பயிற்சிக்காக 54 ஆயிரம் கேள்விகளுடன் கூடிய குறுந்தகடு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
சென்னை அருங்காட்சியகம், தொல்லியல் துறை மற்றும் சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளை ஆகியவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியதாவது:-
பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவில் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பிய மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர். பிறமாநிலங்களை ஒப்பிடும்போது மத்திய அரசின் நீட் தேர்வை எழுதுவதற்கு வசதிபடைத்த மாணவர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை செலவு செய்து பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையை போக்குவதற்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் 54 ஆயிரம் கேள்விகள் உரிய புகைப்படத்துடன் 30 மணி நேரம் ஓடக்கூடிய குறுந்தகடு (சி.டி.) வழங்க உள்ளோம்.
தொல்லியல் துறையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அதிகளவில் நிதி ஒதுக்க முதல்- அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். கீழடியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியில் ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு குடியிருந்திருக்கின்றனர். ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிக்கு வைக்க அரசு ரூ.1 கோடி வழங்கியதுடன், மத்திய அரசுக்கு 2 ஏக்கர் நிலமும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் 3 வகையான சீருடை வழங்க உள்ளோம். 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 6 முதல் 10-ம் வகுப்பு வரையும், 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு என 3 பிரிவாக சீருடை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மாணவர்களின் கல்வி முறை மாற்றப்பட்டு, சி.பி.எஸ்.இ.க்கு இணையாக பாடத்திட்டம் கொண்டுவரப்படும். பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்-டாப் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச அளவில் நிறுவனங்கள் கலந்துகொள்ளும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் பள்ளிக்கல்வி துறை பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறது. 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மதுரையில் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கிறது. மக்களின் மனநிலையை பொறுத்தவரை 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டுவர வேண்டும் என விரும்புகின்றனர்.
ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள இடத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் மாதம் ரூ.7,500 சம்பளத்தில் ஆசிரியரை நியமிக்கும்படி கூறியுள்ளோம். தனியார் பள்ளிகளுக்கு ஆயிரக்கணக்கான பேர் தடையில்லா சான்று பெற்றுச் சென்றுள்ளனர். நான் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறேன். எனவே மற்றவர்கள் கூறுவது பற்றி எனக்கு கவலையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
உதயசந்திரன் இடமாற்றம்?
பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் இடமாற்றம் செய்யப்படப்போவதாக அரசியல் தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளனரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.