காரில் அரசு முத்திரை... கையில் பூங்கொத்து... நான் ஜாயின்ட் செகரட்ரி வந்திருக்கேன்...
2017-08-08@ 01:02:24
* தனி அலுவலகம் கேட்டு அடம்பிடித்த வாலிபர்
* சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
சேலம் : சேலத்தில் அரசு ஜாயின்ட் செகரட்ரி எனக்கூறி, தனி அலுவலகம் கேட்ட போலி ஐஏஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாலை 4.30 மணிக்கு, உயர் அதிகாரிகள் வைத்திருக்கும் அரசு முத்திரையுடன் கூடிய சொகுசு காரில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க டிப்டாப் ஆசாமி வந்தார். முதல் மாடியில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபு அலுவலகத்திற்கு கையில் பூங்கொத்துடன் சென்றார். அவருடன் 55 வயது மதிக்கத்தக்க நபர், சால்வையுடன் நின்று கொண்டிருந்தார். நேர்முக உதவியாளர் விஜய்பாபுவிடம், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என, டிப்டாப் ஆசாமி அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனையடுத்து, அலுவலகத்தில் அமரவைத்த விஜய்பாபு, அவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்தார். தொடர்ந்து, பேசிய டிப்டாப் ஆசாமி, தான் அரசுத்துறை இணை செயலர் எனவும், தனக்கு தனியாக அலுவலகம் ஒதுக்கித்தருமாறும் கேட்டார். மேலும், தான் இணை செயலாளராக நியமிக்கப்பட்டதற்கான பைல்களையும் அளித்தார். ஆனால், விஜய்பாபுவிற்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, டிப்டாப் ஆசாமி கொண்டு வந்த பைல்களை படித்து பார்த்தார். அப்போது, அந்த பைல்கள் அனைத்தும் போலி என்பது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து ரகசியமாக சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசனுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், இருவரையும் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் ஐஏஎஸ் அதிகாரி என கூறிய டிப்டாப் ஆசாமி, சேலம் கிச்சிப்பாளையம் நாராயணா நகர் 6வது தெருவைச் சேர்ந்த தர் (26) என்பது தெரியவந்தது. கெஜ்ஜல்நாய்க்கன்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்த தர், வீட்டின் அருகிலேயே தனியாக அலுவலகம் வைத்துள்ளார். தான் ஐஏஎஸ் படித்து முடித்துவிட்டதாகவும், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணிக்கு சேர வேண்டும் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் இதனை நம்பியிருந்தனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் ₹12 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை, ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்நிலையில் தான் நேற்று பணியில் ேசருவதாக கூறி புதிய கோட், சூட் அணிந்து டிப்டாப் ஆக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். மேலும், இணை செயலராக போலியாக ஆவணமும் தயாரித்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் தனக்கு தனி அலுவலகம் ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு, அதிகாரியிடம் வசமாக சிக்கிக்கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து தரை கைது செய்த போலீசார், சொகுசு காரை பறிமுதல் செய்தனர். மேலும், ஐஏஎஸ் எனக்கூறி ஏதேனும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்: போலி ஐஏஎஸ் அதிகாரி என நடித்து ைகது செய்யப்பட்ட தரை, நேற்றிரவு அவரது வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்றனர். வீட்டின் முகப்பிலேயே, தமிழ்நாடு அரசு பொதுத்துறை (ஆய்வு) தலைவர் மற்றும் இணை செயலாளர் அலுவலகம், சேலம் என அரசு முத்திரையுடன் கூடிய போர்டு தொங்கவிடப்பட்டிருந்தது. உள்ளே தரை அழைத்து சென்ற போலீசார், வீட்டில் இருந்து கம்ப்யூட்டர், விலை உயர்ந்த செல்போன் மற்றும் மூட்டை, மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.
சந்திக்க மறுத்த கலெக்டர்
சேலத்தில், நேற்று மாலை ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி கைது செய்யப்பட்ட தர், கடந்த ஒருவாரமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து நோட்டமிட்டு சென்றுள்ளார். அவரது காரில் அரசு முத்திரை இருந்ததால், போலீசார் அந்த காரை மடக்கவில்லை. நேற்று, பூங்கொத்துடன் கலெக்டரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கலெக்டர் சம்பத்தை சந்திக்க பலவழிகளில் முயற்சி செய்தார். ஆனால், கலெக்டர் அவரை சந்திக்க மறுத்துள்ளார். அங்கிருந்த உதவியாளர்கள் கலெக்டர் பிசியாக இருப்பதாக கூறினர் பின்னர், நேர்முக உதவியாளர் விஜய்பாபுவை சந்திக்குமாறு அனுப்பி வைத்தனர்.
போலி பணி நியமன ஆணை
ஐஏஎஸ் எனக்கூறி, பலருக்கு அரசு வேலைக்கான ஆணைகளை தர் வழங்கியதாக கூறப்படுகிறது. நேற்று கூட, சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு டிரைவர் வேலைக்கான பணிநியமன ஆணையை வழங்கியுள்ளார். தொடர்ந்து, அவரையே தனது காருக்கும் டிரைவராக பணியமர்த்தியுள்ளார். நேற்று அந்த வாலிபர்தான், கலெக்டர் அலுவலகத்திற்கு தர் வந்த காரை ஓட்டி வந்துள்ளார். இதனால், இதுபோல வேறு யாருக்கும் போலி பணிநியமன ஆணைகளை தர் வழங்கியுள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment