10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை!!
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீதும், அது குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற தவறான தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. 10 ரூபாய் நாணயங்கள் கடந்த 2010 மற்றும் 2015 ஆண்டுகளில் அச்சிடப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் பணத்தட்டுப்பாடு காரணமாக இந்த இரண்டு விதான 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன. இதில் 2010 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயம் போலியானது என்ற தகவல் பரவியது.
இதனால் பேருந்துகள், டீக்கடைகள், வியாபார ஸ்தலங்களில் இந்த நாணயங்களை பொதுமக்களிடம் இருந்து வாங்க மறுத்து வந்தனர்.
10 ரூபாய் நாணயங்கள் குறித்து சிலர் பரப்பிய வதந்திகளால் பொதுமக்கள், வணிகர்கள், சிறு வியபாரிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், 10 ரூபாய் நாணயங்கள் சட்டப்படி செல்லும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதேபோல், போலி 10 ரூபாய் நாணயங்கள் தயாரித்த 3 தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டு 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
ஆனாலும், 10 ரூபாய் நாணயங்கள் சட்டப்படி செல்லுமா என்ற அச்சம், மக்களைவிட்டு அகலவில்லை என்றே தெரிகிறது. தென் தமிழகத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்காத பேருந்து நடத்துனர்களும், வியாபார ஸ்தலங்களும் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வங்கி, வியாபார நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் 10 ரூபாய் நாணயங்கள் பெறப்படும் என்ற அறிவிப்பும் ஒட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான புகார் அளிக்க 0424 2260211, 1077, 7806977007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் பிரபாகர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment