Tuesday, August 8, 2017

அமெரிக்காவில் மகன் 'பிசி' : எலும்புக்கூடான தாய்

பதிவு செய்த நாள்08ஆக
2017
00:18

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர், ரிதுராஜ் சஹானி, 43. மனைவியுடன், அமெரிக்காவில் வசிக்கும் இவர், அங்குள்ள, பிரபல, ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது, 68 வயது தாய், மும்பையில் அந்தேரியில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில், 10வது மாடியில் தனியாக வசித்து வந்தார். ரிதுராஜ், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இந்தியா வருவது வழக்கம். அதே போல், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே தாயுடன் போனில் பேசி வந்தார். கடைசியாக, கடந்த ஆண்டு ஏப்ரலில், தாயுடன் போனில் பேசிய ரிதுராஜ், அதன் பின் அவரை தொடர்பு கொள்ளவில்லை. சமீபத்தில் நாடு திரும்பிய ரிதுராஜ், மும்பையில் வசிக்கும் தாயை காணச் சென்றார். நீண்ட நேரம், 'காலிங்பெல்' அடித்தும் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கம் வீட்டாரின் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்றார்.அங்கு, அவரது தாயின் எலும்புக்கூடு மட்டுமே, நாற்காலியில் அமர்ந்த நிலையில் இருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அக்கம் பக்கத்து வீட்டாரிடம் விசாரித்தனர். சில மாதங்களாகவே, அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாகவும், எலியோ, பூனையோ இறந்திருக்கலாம் என நினைத்ததாகவும், அவர்கள் தெரிவித்தனர்.
எலும்புக்கூட்டை கைப்பற்றிய போலீசார், அதை, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024