Tuesday, August 8, 2017

சென்னை - கன்னியாகுமரி ரயில் பாதை : பெருங்குடி - கடலூர் ஆய்வுக்கு 'ஓகே!'
பதிவு செய்த நாள்07ஆக
2017
22:02


சென்னை - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரையோரம் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், முதல் கட்ட மாக, பெருங்குடி - கடலுார் இடையே ஆய்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் இருந்து, மாமல்லபுரம் வழியாக கன்னியாகுமரி வரை, கிழக்கு கடற்கரையையொட்டி, புதிய அகல ரயில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கடந்த, 2008-09ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், சென்னை பெருங்குடியில் இருந்து, மாமல்லபுரம், புதுச்சேரி, கடலுார் வரை, கிழக்கு கடற்கரையோரம், 178 கி.மீ., கிழக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. 

இதற்கு, அபோது, 532 கோடி ரூபாய் செலாகும் என, தெரிவிக்கப்பட்டது. இப்பாதை குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், இத்திட்டம் கைவிடப்பட்டது.

இப்பாதை அமைக்கப்பட்டால், சென்னை எண்ணுார், புதுச்சேரி, கடலுார், காரைக்கால் மற்றும் சிறு துறைமுகங்களுக்கு நேரடியாக ரயில் பாதை அமைக்கவும், கடலோர மாவட்டங் களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். அதனால் இப்பாதை அமைக்க, ரயில்வே அமைச்சகத்திற்கும், வாரியத்துக்கும், கடற்கரையோர மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையொட்டி, பெருங்குடியில் இருந்து, மாமல்ல புரம் வழியாக, கடலுார் திருப்பாதிரிபுலியூர் வரை, புதிய அகல ரயில் பாதை அமைக்க, மீண்டும் ஆய்வு செய்யவும், அடுத்த கட்டமாக, காரைக்குடியில் இருந்து, ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, ஆறுமுகநேரி, காயல்பட்டினம், துாத்துக்குடி, திருச்செந்துார், கூடங்குளம், கன்னியாகுமரி வரை புதிய பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றியும் ஆய்வு செய்யவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய பாதை அமைக்கப்படும் போது, கடலுாரில் இருந்து, திருவாரூர் வரை, தற்போது, பயன்பாட்டில் உள்ள அகல ரயில் பாதை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை, மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதை பணி முடிந்த பின், இப்பாதையை பயன்படுத்திக்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி கூறியதாவது: இப்பாதைக்கு, தமிழக மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், தங்கள் பங்களிப்பை செய்யும் என்ற நோக்கில், இத்திட்டத்திற்கான, ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் கட்டமாக, சென்னை பெருங்குடியில் இருந்து, கடலுார் வரை, ௧௭௮ கி.மீ., புதிய பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து, இரண்டு மாதத்தில், ஆய்வு பணி துவங்கப்பட உள்ளது. இதையொட்டி, பெருங்குடி - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுார் இடையே, புதிய பாதைக்கு தேவையான நிலம் குறித்து, தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்வதற்கு, 60லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு பணி, அக்டோ பரில் துவங்கி, 2018 மார்ச்சுக்குள் முடிக்க  திட்டமிடப்பட்டுள்ளது .இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024