Tuesday, October 3, 2017

கோவையை போன்று ஈரோட்டில், 'ஏர் டாக்சி'
பதிவு செய்த நாள்02அக்
2017
22:53

ஈரோடு;''கோவையை போன்று, ஈரோட்டில், 'ஏர் டாக்சி' திட்டம் கொண்டு வரப்படும்,'' என, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர், ஹரிசங்கர் வர்மா கூறினார்.

'துாய்மை பாரதம்' திட்டத்தில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர், ஹரிசங்கர் வர்மா தலைமையிலான அதிகாரிகள், தொழிலாளர்கள், ஈரோடு காவிரி ஆற்றில், நேற்று, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.ஹரிசங்கர் வர்மா கூறியதாவது:காவிரி ஆற்றில், ஆகாய தாமரை, மரம், செடி, கொடி கிடப்பதால், நீரோட்டம் பாதிக்கிறது. இங்கிருந்து தான், ஈரோடு ரயில்வே காலனி, ரயில்வே ஸ்டேஷனுக்கு, தண்ணீர் எடுக்கப்படுகிறது. நீருந்து நிலைய பகுதி மட்டுமின்றி, காவிரியில், இதர இடங்களையும் சுத்தம் செய்ய உள்ளோம்.

கோவையை போன்று, ஈரோட்டில், 'ஏர் டாக்சி' திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.'ஏர் டாக்சி' என்பது, 'ஆப்ஸ்' அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, சேலம் ரயில்வே கோட்டத்தில், கோவை, வடகோவை, போத்தனுார் மற்றும் சேலம் என, நான்கு இடங்களில், இந்த முறையில், ரயில் பயணியருக்கு, டாக்சி வசதி செய்து தரப்படுகிறது.மொபைல் போனில் இதற்கான, 'ஆப்' மூலம் பதிவு செய்தால், ரயில்வே சார்பில், டாக்சி வசதி செய்து தரப்படும். மொபைல் போன் இல்லாதவர்கள், இதற்கென, ரயில்வே ஸ்டேஷனில் அமைக்கப்பட்டுள்ள கவுன்டரை அணுகினால், டாக்சி வசதி ஏற்பாடு செய்யப்படும். ஐந்தாவது இடமாக, ஈரோட்டில்,இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
பரோல்' விதிகளை திருத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி: 'குற்றவாளிகளும், சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் திருந்தி வாழவும், குடும்ப, சமூக தொடர்புகளை மேம்படுத்தவும், 'பரோலில்' அனுமதிப்பதற்கான விதிகளை மேம்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




கடந்த, 1993ம் ஆண்டு, டிச., 6ல், ரயில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், தடா நீதிமன்றத்தால், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவன், அஸ்பாக். தனக்கு, தொடர்ந்து, 'பரோல்' அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி,  அசோக் பூஷண் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது:குற்றவாளிகளை திருத்தவே, தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த நோக்கத்தை அடையும் வகையில், பரோலில் விடுவிப்பது, சட்டத்துக்குஉட்பட்டது தான்.

சுதந்திர காற்றை சுவாசிக்க

தண்டனைக் காலத்தில், குறைந்த நாட்கள், பரோலில் குற்றவாளிகளை விடுவிப்பது, அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும்; சமூகத்துடன் அவர்களுக்கு உள்ள தொடர்பை, நிலைநிறுத்த முடியும்.குற்றவாளிகள், தங்களின் குடும்ப மற்றும் சமூக தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில், பரோல் அனுமதிக்கப்பட வேண்டும். திருந்தி வாழ்வதில் ஆர்வம் உள்ள,நன்னடத்தை மிக்க குற்றவாளிகள், குறைந்த காலத்திற்காவது, சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிக்க வேண்டும்.

1955ல் இயற்றப்பட்ட விதிகள்

குற்றவாளி கள் திருந்தி வாழ்வது,  சமூகத்திற்கும் நன்மை பயக்கும்.எனவே, தண்டனை கைதிகளை, 'பரோலில்' தற்காலிகமாக விடுதலை செய்வது மற்றும் நீண்ட கால தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்வது ஆகியன குறித்து, 1955ல் இயற்றப்பட்ட விதிகளை, மத்திய அரசு மேம்படுத்த வேண்டும். 

பரோலில் விடுவிக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு, உரிய விதிகளை அரசு வழங்க வேண்டும். இந்த தீர்ப்பின் முழு விபரம், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறைக்கு அனுப்பப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

டயர் வெடித்து கவிழ்ந்த அரசு பஸ் ஒருவர் பலி; 35 பயணியர் படுகாயம்
பதிவு செய்த நாள்02அக்
2017
22:57



உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே, டயர் வெடித்து அரசு பஸ் கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார்; 35 பயணியர் படுகாயம் அடைந்தனர்.மதுரையில் இருந்து, நேற்று காலை, அரசு விரைவு பஸ், சென்னை புறப்பட்டது. காலை, 7:00 மணியளவில், மதுரை மாட்டுத்தாவணி அருகே வந்த போது, பஸ் இன்ஜின் பழுதானது. மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு, பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவர் மாரிமுத்து, 37, பஸ்சை ஓட்டினார்.

மதியம், 12:10 மணியளவில், விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வந்த போது, பஸ்சின் முன்புற, இடதுபக்க டயர் திடீரென வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. பஸ்சின் இடிபாடுகளில், பயணியர் சிக்கினர்.விபத்தில், பஸ் கண்டக்டர், டிரைவர் மற்றும் பயணியர் என, 36 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார், தீயணைப்புத் துறையினர், பயணியரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில், கண்ணன், 60, என்ற முதியவர் பரிதாபமாக இறந்தார்.





ரேஷனில் வழங்கும் பருப்பு பழனிசாமிக்கு, 'பார்சல்'

ரேஷன் பருப்பு பார்சலை, முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், தபாலில் அனுப்ப, ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.



தமிழகத்தில், சிறப்பு பொது வினியோக திட்டப்படி, ரேஷன் கடைகளில், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு, கிலோ, தலா, ௩௦ ரூபாய்க்கும், லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. இவற்றுக்காக, ஆண்டுக்கு, 1,400 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. சில ஆண்டுகளாக, துவரம் பருப்பிற்கு பதில், கனடா பருப்பு வழங்கப்படுகிறது.

தரமற்ற பருப்பு

நுகர்பொருள் வாணிபக் கழகம், அதிக  விலைக்கு பருப்பு, பாமாயில் வாங்கியதால் ஏற்பட்ட இழப்பு மற்றும் நிதி நெருக்கடி போன்றவற்றால், சிறப்பு வினியோகதிட்டத்தை நிறுத்த, ஜனவரியில், தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், அந்த விபரத்தை, மக்களிடம் முறையாக தெரிவிக்கவில்லை. இதனால், பொருட்கள் கிடைக்காததால், மக்கள் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, உளுத்தம் பருப்பை நிறுத்தி, மார்ச் முதல், கனடா பருப்பு, பாமாயில் மட்டும் வழங்கப்படுகின்றன. தற்போது, கனடா பருப்பிற்கு பதில், மசூர் பருப்பு வழங்கப்படுகிறது. இது, தரமற்று மோசமாக இருப்பதாக, மக்களிடம் இருந்து, தொடர்ந்து புகார்கள்வந்தும், அரசு அலட்சியமாக உள்ளது.

எந்த நடவடிக்கையும் இல்லை

இது குறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது: கடைக்கு வருகிற பருப்பை தான், மக்களுக்கு தருகிறோம். அது, 'சமையலுக்கு உகந்தது அல்ல' எனக்கூறி, அவர்கள்,

எங்களுடன் பிரச்னை செய்கின்றனர். அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால், ஒவ்வொரு மாவட்ட ரேஷன் கடைகளில் இருந்தும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வீடுகளுக்கு, இந்த பருப்பு பார்சலை, தபாலில் அனுப்ப உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

- நமது நிருபர் -
  • அக்டோபர் 18 (பு) தீபாவளி
  • அக்டோபர் 19 (வி) கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
  • அக்டோபர் 25 (பு) சூரசம்ஹாரம்
  • நவம்பர் 04 (ச) குருநானக் ஜெயந்தி
  • டிசம்பர் 01 (வெ) மிலாடி நபி
  • டிசம்பர் 02 (ச) திருக்கார்த்திகை
இசை நிகழ்ச்சியில் கொடூர தாக்குதல் அமெரிக்காவில் 50 பேர் பலி

பதிவு செய்த நாள்02அக்
2017
22:59




லாஸ் வேகாஸ்;அமெரிக்காவில், லாஸ் வேகாஸ் நகரில், இசை நிகழ்ச்சி நடந்த போது, மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 50 பேர் பலியாகினர்; 400 பேர் காயமடைந்தனர். மர்ம நபரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம், அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில், டொனால்டு டிரம்ப், ஜனவரியில் அதிபராக பதவியேற்றார். லாஸ் வேகாஸ் நகரில் உள்ள, மேண்டலே பே ஓட்டல் அருகில், திறந்தவெளி மைதானத்தில், நேற்று முன்தினம் இரவு, பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியை காண, 2,000 பேர் திரண்டிருந்தனர். பிரபல பாடகர், ஜேசன் வேல்டகர் பாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில், நிகழ்ச்சி நிறைவடைய இருந்தது.

இரவு, 10:00 மணிக்கு, அருகிலுள்ள ஓட்டலின், மாடியில் இருந்து மர்ம நபர் ஒருவன், இயந்திரத் துப்பாக்கியால், மைதானத்தில் இருந்த மக்கள் மீது சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். பலர், தலை, கழுத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து, சுருண்டு விழுந்து இறந்தனர்.துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும், அங்கு கூடியிருந்தவர்கள நாலாபுறமும் சிதறி ஓடினர். மர்ம நபர், சில நிமிட இடைவெளிக்கு பின், மீண்டும் சரமாரியாக சுட ஆரம்பித்தான். அதன்பின், ஓட்டலின் உள்ளே பதுங்கினான்.

போலீசார், மைதானத்துக்கு விரைந்து வந்து, பலியான, 50 பேரின் உடல்களை மீட்டனர். காயம் அடைந்த, 400 பேரை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் பதுங்கியிருந்த ஓட்டலை, சிறப்பு ஆயுதப் பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். 32வது மாடியின் ஓர் அறையில் மர்ம நபர், பதுங்கி இருந்தது தெரிந்தது.
போலீசார், அந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்தபோது, மர்ம நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் வைத்திருந்த, எட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவன், லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த, ஸ்டீபன் பேட்டாக், 64, என்பது தெரியவந்தது. ஸ்டீபனின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், அவனது காதலியை தேடி வருகின்றனர்.துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பிய, மானிக் டெகர்ப் என்பவர் கூறுகையில், ''கண்ணாடி உடைவது போன்ற சத்தம், முதலில் கேட்டது.

''அதன் பின்னரே, துப்பாக்கிச்சூடு என்பதை உணர்ந்து கொண்டோம். சில நிமிடம் அமைதியாக இருந்தது. பின், மீண்டும் அவன் சுட ஆரம்பித்தான்,'' என்றார்.ஜோ பிட்ஸ் என்பவர் கூறுகையில், ''நிகழ்ச்சி முடியும் நேரம் என்பதால், மேடையை நோக்கி மக்கள் நகர்ந்தனர். அப்போது பட்டாசு வெடிப்பது போன்று சத்தம் கேட்டது. தொடர்ந்து சுட்டதால், இயந்திரத் துப்பாக்கியால் யாரோ சுடுவதை தெரிந்து கொண்டோம்,'' என்றார்.
கடந்த, 2016ம் ஆண்டு, ஜூனில், புளோரிடா மாகாணத்தில், இரவு விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 49 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், லாஸ் வேகாஸில் நடந்துள்ள துப்பாக்கிச்சூடு, அமெரிக்க வரலாற்றில், மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவமாக பதிவாகியுள்ளது.அமெரிக்க அதிபர், டிரம்ப், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.






உலக முதியோர் தினம் கடலூரில் ஊர்வலம்
பதிவு செய்த நாள்03அக்
2017
00:38

கடலுார் : உலக முதியோர் தினத்தையொட்டி கடலுாரில் ஊர்வலம் நடந்தது.முதியோர்களை வன்கொடுமை செய்வதை தடுக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கடலுார் பெரியார் சிலை அருகில் இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். காங்., மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகர் துவக்கி வைத்தார். ஊர்வலம் பாரதி சாலை வழியாக டவுன் ஹாலை அடைந்தது.ஊர்வலத்தில் தர்மலிங்கம், ஜெகநாதன், கணேசன், விஜியலட்சுமி, தயா பங்கேற்றனர்.

NEWS TODAY 04.06.2026