Tuesday, October 3, 2017

கோவையை போன்று ஈரோட்டில், 'ஏர் டாக்சி'
பதிவு செய்த நாள்02அக்
2017
22:53

ஈரோடு;''கோவையை போன்று, ஈரோட்டில், 'ஏர் டாக்சி' திட்டம் கொண்டு வரப்படும்,'' என, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர், ஹரிசங்கர் வர்மா கூறினார்.

'துாய்மை பாரதம்' திட்டத்தில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர், ஹரிசங்கர் வர்மா தலைமையிலான அதிகாரிகள், தொழிலாளர்கள், ஈரோடு காவிரி ஆற்றில், நேற்று, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.ஹரிசங்கர் வர்மா கூறியதாவது:காவிரி ஆற்றில், ஆகாய தாமரை, மரம், செடி, கொடி கிடப்பதால், நீரோட்டம் பாதிக்கிறது. இங்கிருந்து தான், ஈரோடு ரயில்வே காலனி, ரயில்வே ஸ்டேஷனுக்கு, தண்ணீர் எடுக்கப்படுகிறது. நீருந்து நிலைய பகுதி மட்டுமின்றி, காவிரியில், இதர இடங்களையும் சுத்தம் செய்ய உள்ளோம்.

கோவையை போன்று, ஈரோட்டில், 'ஏர் டாக்சி' திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.'ஏர் டாக்சி' என்பது, 'ஆப்ஸ்' அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, சேலம் ரயில்வே கோட்டத்தில், கோவை, வடகோவை, போத்தனுார் மற்றும் சேலம் என, நான்கு இடங்களில், இந்த முறையில், ரயில் பயணியருக்கு, டாக்சி வசதி செய்து தரப்படுகிறது.மொபைல் போனில் இதற்கான, 'ஆப்' மூலம் பதிவு செய்தால், ரயில்வே சார்பில், டாக்சி வசதி செய்து தரப்படும். மொபைல் போன் இல்லாதவர்கள், இதற்கென, ரயில்வே ஸ்டேஷனில் அமைக்கப்பட்டுள்ள கவுன்டரை அணுகினால், டாக்சி வசதி ஏற்பாடு செய்யப்படும். ஐந்தாவது இடமாக, ஈரோட்டில்,இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024