Tuesday, October 3, 2017

அ.தி.மு.க., - தி.மு.க., 'மாஜி'க்களுக்கு கமல் வலை
அ.தி.மு.க., மற்றும், தி.மு.க.,வில், முக்கிய நிர்வாகிகளை அழைத்து, நடிகர் கமல் ரகசிய ஆலோசனை நடத்தி வருவது, இரு கட்சிகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.




நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என, அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அவருக்கு முன், அரசியலில் குதிக்கப் போவதாக, கமல் அறிவித்துள்ளார்; அதற்கான ஆயத்தப் பணிகளையும் துவக்கி விட்டார்.

அழைப்பு விடுத்தார்

கேரள முதல்வர், பினராயி விஜயனை சந்தித்து பேசினார். டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், நேராக கமல் வீட்டிற்கு வந்து, அவரது கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். அதை தவிர்த்த கமல், தனிக்கட்சி துவங்கும் திட்டத்தில் உள்ளார்.விரைவில், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியை சந்தித்து பேசவும் திட்டமிட்டு உள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைத்து, கட்சி துவங்குவது தொடர்பாக, கமல் ஆலோசனை நடத்தி வருகிறார். அ.தி.மு.க., மற்றும், தி.மு.க.,வில் உள்ள பிரமுகர்களையும், ரகசியமாக சந்தித்து பேசி வருகிறார். அ.தி.மு.க.,வில், முன்னாள் அமைச்சர்கள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் போன்றோர், கமலை சந்தித்து பேசி உள்ளனர். அதே போல்,தி.மு.க.,விலும், முன்னாள் அமைச்சர்கள் சிலர், கமலை சந்தித்துள்ளனர்.

அரசியல் வியூகம்

ஒவ்வொருவரையும், கமல் தனித்தனியே அழைத்து பேசி உள்ளார். அவர்களிடம், அவர்கள் சார்ந்துள்ள கட்சி உட்கட்டமைப்பு, நிர்வாகிகள், அவர்களின் செயல்பாடு, தலைவர்களின் செயல்பாடு, அரசியல் வியூகம் போன்ற விபரங்களை கேட்டறிந்து உள்ளார்.

அவர்களில் சிலரை மட்டும், தன்னுடன் இணைந்து செயல்பட முடியுமா என, கமல் கேட்டுள்ளார்; சிலர், சம்மதம் தெரிவித்து உள்ளனர். சிலர், யோசித்து கூறுவதாக திரும்பி உள்ளனர். 'மாஜி'க்கள் கமலை சந்தித்த விவகாரம், அ.தி.மு.க., - மற்றும், தி.மு.க.,வில் புயலை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024