டயர் வெடித்து கவிழ்ந்த அரசு பஸ் ஒருவர் பலி; 35 பயணியர் படுகாயம்
பதிவு செய்த நாள்02அக்
2017
22:57
உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே, டயர் வெடித்து அரசு பஸ் கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார்; 35 பயணியர் படுகாயம் அடைந்தனர்.மதுரையில் இருந்து, நேற்று காலை, அரசு விரைவு பஸ், சென்னை புறப்பட்டது. காலை, 7:00 மணியளவில், மதுரை மாட்டுத்தாவணி அருகே வந்த போது, பஸ் இன்ஜின் பழுதானது. மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு, பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவர் மாரிமுத்து, 37, பஸ்சை ஓட்டினார்.
மதியம், 12:10 மணியளவில், விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வந்த போது, பஸ்சின் முன்புற, இடதுபக்க டயர் திடீரென வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. பஸ்சின் இடிபாடுகளில், பயணியர் சிக்கினர்.விபத்தில், பஸ் கண்டக்டர், டிரைவர் மற்றும் பயணியர் என, 36 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார், தீயணைப்புத் துறையினர், பயணியரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில், கண்ணன், 60, என்ற முதியவர் பரிதாபமாக இறந்தார்.
No comments:
Post a Comment