Tuesday, October 3, 2017

2 மாதமாக சம்பளம் வழங்காததால் சென்னையில் இருந்து நெல்லைக்கு பஸ் கடத்தல்: டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை

2017-10-02@ 00:28:41




நெல்லை: சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் சத்யா(39). இவரிடம் 3 ஆம்னி பஸ்கள் உள்ளன. இந்த பஸ்கள் சென்னையில் இருந்து பெங்களூரு, திருப்பதி, திருச்சி, மதுரை மற்றும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் இயங்கி வருகிறது. இதில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்று வரும் பஸ்சில் நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த சாலமோன் (24) டிரைவராகவும், வள்ளியூர் அருகே பண்டாரக்குளத்தை சேர்ந்த ராஜேஷ் (22) கண்டக்டராகவும் உள்ளனர். இவர்களுக்கு பஸ் உரிமையாளர், கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என தெரிகிறது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்வதாக சாலமோன், ராஜேஷ் ஆகியோர் சத்யாவிடம் கூறிவிட்டு அங்கிருந்து நெல்லைக்கு பஸ்சை கடத்தி வந்தனர்.

பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே பஸ்சை நிறுத்தியிருந்தனர். இதுகுறித்து பஸ் உரிமையாளர் சத்யா தாம்பரம் போலீசில் புகார் செய்தார். சென்னை போலீசார் நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கடத்தப்பட்ட பஸ்சை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். டிரைவர் சாலமோன், கண்டக்டர் ராஜேஷ் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர். மேலும் பஸ் உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
"கதிரியக்க மருத்துவப் பரிசோதனை தேவை அதிகரித்து வருகிறது'

By DIN | Published on : 02nd October 2017 04:18 AM

மருத்துவத்துறையில் எக்ஸ்ரே, எம்ஆர்ஐ, சிடி ஆகிய கதிரியக்க மருத்துவப் பரிசோதனைகளின் தேவை அதிகரித்து வருகிறது என பாரத் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மருத்துவர் வி.கனகசபை கூறினார்.

சென்னை குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை (செப்.30) நடைபெற்ற சர்வதேச மருத்துவக் கதிரியக்கத் தொழில்நுட்பக் கருத்தரங்குத் தொடக்கவிழாவில் அவர் மேலும் பேசியது:-
மனித உடலைப் பாதிக்கும் சுமார் 150 வகை நோய்கள் மூலம் ஏற்பட்ட குறைபாடு, பிரச்னை, பாதிப்பு ஆகியவற்றைத் துல்லியமாகக் கண்டறிவதன் மூலம் உறுதி செய்து, உரிய சிகிச்சை அளிக்க எக்ஸ்ரே, எம்.ஆர்ஐ உள்ளிட்ட கதிரியக்க மருத்துவப் பரிசோதனைகள் பேருதவி புரிகின்றன. நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் நவீன கதிரியக்க மருத்துவப் பரிசோதனைகளால் மருத்துவச் செலவு அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என்றாலும், வருங்காலத்தில் அது குறைய வாய்ப்புள்ளது.

சர்வதேச அளவில் கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கதிரியக்க மருத்துவப் பரிசோதனை, சராசரியாக 700 மடங்கு அதிகரித்துள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளில் உலகெங்கும் அதிகரித்து வரும் ôர் மக்கள் தொகை காரணமாக, 1400 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

நோய் அறிகுறிகளைக் கண்டறியும் மருத்துவர், நோய் எத்தகைய பாதிப்பை எந்த இடத்தில் எவ்வாறு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் அறிந்து, உரிய சிகிச்சை அளிக்க உறுதுணையாகத் திகழ்ந்து வரும் கதிரியக்க மருத்துவப் படிப்பில் சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் வளர்ச்சி குறித்த அறிவாற்றலைச் சர்வதேச மருத்துவ சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இதில் கல்வி ஆலோசகர் வீரபாகு, அமெரிக்க பெதஸ்டா மருத்துவப் பல்கலைக்கழக கதிரியக்கத்துறைத் தலைவர் மார்க் டி.மர்பி, பிரிட்டன் ஸ்டாக்போர்ட் பவுண்டேஷன் நியுரோ கதிரியக்க ஆலோசகர் டாக்டர் எம்.சரவணன், சென்னை மருத்துவக் கல்லூரி பெர்னார்டு கதிரியக்கவியல் துறை இயக்குநர் ஆர்.ரவி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி துறைத் தலைவர் சி.அமர்நாத், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி துறைத் தலைவர் ஜெ.தேவிமீனாள், ராமச்சந்திரா மருத்துவமனை துறைத் தலைவர் பி.எம்.வெங்கடசாய், பாலாஜி மருத்துவக்கல்லூரி முதல்வர் டி.ஆர்.குணசேகரன், துணை முதல்வர் சாய்குமார், துறைத் தலைவரும்,கருத்தரங்குத் தலைவருமான எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அக்டோபர் 4 மின் தடை
By DIN | Published on : 03rd October 2017 03:50 AM


பராமரிப்புப் பணிகள் காரணமாக பந்தர் கார்டன், கொடுங்கையூர் கே.கே.நகர், அம்பத்தூர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (அக்.4) மின்தடை ஏற்படும்.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்டும் இடங்கள்: 

பந்தர் கார்டன்: காவலர் குடியிருப்பு, பேப்பர் மில்ஸ் பிரதான சாலை, சுந்தர விநாயகர் கோவில் தெரு, பெரம்பூர் பூங்கா தெரு, பந்தர் கார்டன் தெரு, ராகவன் தெரு, மார்கெட் தெரு, பந்தர் கார்டன் பிரதான தெரு, பந்தர் கார்டன் 1, 2 மற்றும் 3-ஆவது தெரு, வேணுகோபால் சாமி தெரு, சடையப்பதாஸ் தெரு.
கொடுங்கையூர்: முத்தமிழ் நகர் 4,5,6,7-ஆவது பிளாக்குகள் மற்றும் முத்தமிழ் நகர் தொழிற்பேட்டைப் பகுதி 7-ஆவது பிளாக். 

கே.கே.நகர்: கே.கே. நகர் 1 முதல் 12 செக்டார் (ஒரு பகுதி), ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே. சண்முகம் சாலை, நெசப்பாக்கம் (ஒரு பகுதி), அசோக் நகர் 1,9 மற்றும் 11-ஆவது நிழற்சாலை, முனுசாமி சாலை, கன்னிகாபுரம், விஜயராகவாபுரம், 80 அடி சாலை.
அம்பத்தூர்: அலையன்ஸ் திட்டம் (ஆர்ச்சிட் ஸ்பிரிங்), அன்னை நகர், வாகை நகர், சிவகாமி நகர், டி.வி.எஸ் நகர், கண்டிகை, லேக் வியூ தோட்டம், பெருமாள் கோயில் தெரு, பல்லா தெரு, வத்சலா நகர், மேட்டுத் தெரு, காவியா நகர், சாரதா நகர், எல்லையம்மன் நகர், கோபாலகிருஷ்ணன் நகர், என்.ஏ.எஸ் தோட்டம், சிவலிங்கபுரம், சக்கி நகர், சீதா அம்மன் நகர், புத்தகரம், செந்தில் நகர்.

கொளத்தூர்: வீனஸ் நகர், கடப்பா சாலை, பார்வதி அம்மன் கோயில், டீச்சர்ஸ் காலனி (ஒரு பகுதி), ரமணி நகர், கணேஷ் நகர், ஹார்பர் காலனி, அந்தோணி நகர், மல்லிகை நிழற்சாலை, அசோக் தெரு, பஜனைக் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, திருவள்ளுவர் நகர், செல்வம் நகர், அன்னை பராசக்தி தெரு, கஸ்தூரி தெரு.
பாரத் பல்கலைக்கழக இணை பதிவாளருக்கு பாராட்டு

By DIN | Published on : 03rd October 2017 03:53 AM

சர்வதேச மின்னியல், மின்னணுவியல் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர்கள் குழு உறுப்பினராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட பாரத் பல்கலைக்கழக இணைப் பதிவாளர் ஆர்.ஹரிபிரசாத்துக்கு பாரத் பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை பாராட்டுவிழா நடத்தப்பட்டது.
சர்வதேச அளவில் 161 நாடுகளைச் சேர்ந்த 4 லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட மின்னியல், மின்னணுவியல் பொறியாளர்கள் அமைப்பின் மாநாடு கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றது.

அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட 31 நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் பங்கேற்ற மாநாட்டில், 5 தலைவர்கள் அடங்கிய
குழுவின் உறுப்பினராக ஆர்.ஹரிபிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு சென்னையை அடுத்த சேலையூரில் அமைந்துள்ள பாரத் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் பல்கலைக்கழக துணை இணை வேந்தர் கே.பி.தூயமணி, முதல்வர் ஜெ.ஹமீது உசேன், தேர்வு கண்காணிப்பாளர் பிரேம் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரயில் நிலையத்தில் தவறான அறிவிப்பு மத்திய அமைச்சர் அதிருப்தி
By DIN | Published on : 03rd October 2017 02:06 AM



குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்புப் பலகையில் பயணிகளுக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அவர் எழுதிய கடிதத்தில் அவர் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்
.
இதுதொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திய தோமர், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். ஜபல்பூர் - நிஜாமுதீன் விரைவு ரயிலில் பயணிப்பதற்காக மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் ரயில் நிலையத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.1) சென்ற மத்திய அமைச்சர் தோமர், அங்கு நடைமேடையில் காத்திருந்தார். 

அப்போது, எந்தெந்த வகுப்புப் பெட்டிகள் எங்கெங்கு நிற்கும் என்பது தொடர்பான தகவல்கள் அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டது. அதன்படி பயணிகள் தங்களுக்குரிய பெட்டிகள் வந்து நிற்கும் இடங்களில் காத்திருந்தனர். ஆனால், அந்தத் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்பது ரயில் வந்தவுடன் தெரிந்தது. அறிவிப்பில் கூறியதற்கும், ரயில் பெட்டிகள் நின்ற இடத்துக்கு சம்பந்தமில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, தங்களது இருக்கை உள்ள பெட்டிகளைத் தேடி பயணிகள் அலைமோதினர். இந்தச் சம்பவத்தால் அதிருப்தியடைந்த தோமர், ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தவறான தகவல்கள் பெரும் அசம்பாவிதத்துக்கு வழிவகுக்கக் கூடும் என்று அதில் குறிப்பிட்டுள்ள தோமர், இதுதொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கடவுள் அழைக்கும் போது பத்மநாபசுவாமி கோயில் செல்வேன்:கர்நாடக இசைக்கலைஞர் ஜேசுதாஸ் விருப்பம்

பதிவு செய்த நாள்02அக்
2017
23:42

நாகர்கோவில்;கடவுள் அழைக்கும் போது பத்மநாபசுவாமி கோயில் செல்வேன், என்று கர்நாடக இசை கலைஞர் ஜேசுதாஸ் கூறினார்.தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அதிகமான பக்திபாடல்களை பாடி வருபவர் ஜேசுதாஸ். சபரிமலையில் காலையில் நடை திறக்கும் போது இவர் பாடிய ஐயப்ப சுப்ரபாதம், இரவில் இவரது தாலாட்டு பாடலான அரிவராசனம் பாடல் ஒலிபரப்பப்படும். இவர் சமீபத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் செல்ல அனுமதி கோரியிருந்தார். அதற்கு நிர்வாக கமிட்டி இதற்கு அனுமதி வழங்கியது.ஆண்டு தோறும் அக்.ஒன்றாம் தேதி திருவனந்தபுரத்தில் ஒரு மன்றத்தில் ஜேசுதாஸ் கர்நாடக இசை கச்சேரி நடத்துவார். நேற்று முன் தினம் அந்த நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் செப்., 30 அல்லது அக்.ஒன்றாம் தேதி ஜேசுதாஸ் பத்மநாபசுவாமி கோயில் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கோயில் செல்ல வில்லை.
இது குறித்து அவர் இன்னிசை கச்சேரி மேடையில் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குருவாயூர் கோயில் செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த கோபத்தில் இனி ஒரு கிருஷ்ணன் கோயிலுக்கும் செல்ல மாட்டேன், என்று கூறியிருந்தேன். ஆனால் கடந்த மூகாம்பிகா கோயிலுக்கு செல்லும் வழியில், எனது நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்கு சென்றேன். அப்போது சுவாமிக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த தரிசனம் என்னால் மறக்க முடியாதது.குருவாயூர் பிரச்னையில் பிடிவாதமாக இருந்தததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அதுபோல கடவுள் அழைக்கும் போது பத்மநாபசுவாமி கோயில் செல்வேன். அங்கு பாடுவேன். நேரம் வரும் போது கடவுள் என்னை அழைப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க., - தி.மு.க., 'மாஜி'க்களுக்கு கமல் வலை
அ.தி.மு.க., மற்றும், தி.மு.க.,வில், முக்கிய நிர்வாகிகளை அழைத்து, நடிகர் கமல் ரகசிய ஆலோசனை நடத்தி வருவது, இரு கட்சிகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.




நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என, அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அவருக்கு முன், அரசியலில் குதிக்கப் போவதாக, கமல் அறிவித்துள்ளார்; அதற்கான ஆயத்தப் பணிகளையும் துவக்கி விட்டார்.

அழைப்பு விடுத்தார்

கேரள முதல்வர், பினராயி விஜயனை சந்தித்து பேசினார். டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், நேராக கமல் வீட்டிற்கு வந்து, அவரது கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். அதை தவிர்த்த கமல், தனிக்கட்சி துவங்கும் திட்டத்தில் உள்ளார்.விரைவில், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியை சந்தித்து பேசவும் திட்டமிட்டு உள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைத்து, கட்சி துவங்குவது தொடர்பாக, கமல் ஆலோசனை நடத்தி வருகிறார். அ.தி.மு.க., மற்றும், தி.மு.க.,வில் உள்ள பிரமுகர்களையும், ரகசியமாக சந்தித்து பேசி வருகிறார். அ.தி.மு.க.,வில், முன்னாள் அமைச்சர்கள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் போன்றோர், கமலை சந்தித்து பேசி உள்ளனர். அதே போல்,தி.மு.க.,விலும், முன்னாள் அமைச்சர்கள் சிலர், கமலை சந்தித்துள்ளனர்.

அரசியல் வியூகம்

ஒவ்வொருவரையும், கமல் தனித்தனியே அழைத்து பேசி உள்ளார். அவர்களிடம், அவர்கள் சார்ந்துள்ள கட்சி உட்கட்டமைப்பு, நிர்வாகிகள், அவர்களின் செயல்பாடு, தலைவர்களின் செயல்பாடு, அரசியல் வியூகம் போன்ற விபரங்களை கேட்டறிந்து உள்ளார்.

அவர்களில் சிலரை மட்டும், தன்னுடன் இணைந்து செயல்பட முடியுமா என, கமல் கேட்டுள்ளார்; சிலர், சம்மதம் தெரிவித்து உள்ளனர். சிலர், யோசித்து கூறுவதாக திரும்பி உள்ளனர். 'மாஜி'க்கள் கமலை சந்தித்த விவகாரம், அ.தி.மு.க., - மற்றும், தி.மு.க.,வில் புயலை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -

Dismissal from service should be reserved for grave misconduct: SC

Dismissal from service should be reserved for grave misconduct: SC The Supreme Court ruled that dismissal from service should be imposed on...