Thursday, April 18, 2019

வெளிநாட்டுப் பயணமா? - குடிநுழைவு நடைமுறைகள்

18/4/2019 10:32Update: 18/4/2019 13:09

சிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள், அடுத்த வாரத்திலிருந்து கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியம் இல்லை என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் நேற்று அறிவித்தது.

சிங்கப்பூரிலிருந்து புறப்படும் போது எந்தக் குடிநுழைவு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்?

eIACS எனும் மேம்பட்ட குடிநுழைவுத் தானியக்க முறையைக் கொண்டு சிங்கப்பூரிலிருந்து புறப்பட அனுமதிக்கப்படுவோர்:

- சிங்கப்பூர்க் குடிமக்கள்
- சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்
- நீண்டகால வருகை அனுமதி பெற்றவர்கள்
- வேலை உரிமம் பெற்றவர்கள் (S Pass, வேலை அனுமதி அட்டை, சார்ந்திருப்போர் அனுமதி அட்டை வைத்திருப்போர்)
- குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் பயணத்திட்டத்தின்கீழ் பதிவு செய்தோர்

சிங்கப்பூருக்கு வருகை புரியும் அனைத்து வெளிநாட்டவரும் BioScreen முறையில் தங்கள் கைரேகைகளைப் பதிவு செய்வர்.

அவ்வாறு செய்யும்போது தானியக்க முறையின் மூலம் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து புறப்படலாம். அவர்கள் கடப்பிதழில் முத்திரை பெறத் தேவையில்லை. வழக்கமான குடிநுழைவு வரிசைகளில் நிற்கவும் தேவையில்லை

வழக்கமான குடிநுழைவுச் சோதனை முகப்பு வழியாகச் செல்வோர் BioScreen வழியாகத் தங்கள் கைரேகைகளை மீண்டும் பதிவு செய்ய வேண்டும். அப்போது மட்டுமே கடப்பிதழில் முத்திரை குத்தப்படும்.

6 வயதுக்கும் குறைவான சிறுவர்களும் வழக்கமான சோதனை முகப்பு வழியாகக் கடப்பிதழில் முத்திரை பெற்றுப் புறப்பட வேண்டும்.

https://seithi.mediacorp.sg/mobilet/singapore/ica-bioscan/4267978.html

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024