Thursday, April 18, 2019

மை'யுடன் வந்தால் ஓட்டலில் தள்ளுபடி

Added : ஏப் 18, 2019 03:16 |

சென்னை: தேர்தலில் ஓட்டுப் போட்டு, விரலில், 'மை'யுடன் வந்தால், 10 சதவீதம் தள்ளுபடி தரப்படும் என, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல், 50 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று, லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, பல்வேறு நிறுவனங்கள், ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு, பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதன்படி, 'ஓட்டுப் போட்டு, விரலில் மையுடன் சாப்பிட வருவோருக்கு, 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்' என, தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள, 'கிளரியன் பிரசிடென்ட்' நட்சத்திர ஓட்டல், இன்று முதல், 21ம் தேதி வரை, 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது. 'ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும், சாப்பிட வரலாம்; ஓட்டு போட்டதன் அடையாளமாக, விரல் மையை காண்பித்தால் போதும்; ஒவ்வொரு முறையும், 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்' என, ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Shape, size of retina veins can predict stroke risk: Study

Shape, size of retina veins can predict stroke risk: Study DurgeshNandan.Jha@timesofindia.com 15.01.2025 New Delhi : The shape and size of v...