'சாமி' ஆடிய பெண் அலுவலர் தெறித்து ஓடிய வாக்காளர்கள்
Added : ஏப் 19, 2019 00:09
சிதம்பரம், ஓட்டுப்பதிவு பெண் அலுவலர், திடீரென ஆக்ரோஷமாக சாமி ஆடியதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, வடக்கு வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில், நேற்று காலை, 10:00 மணியளவில், விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்தது. தீட்சிதர்கள், நீண்ட வரிசையில் நின்று, ஓட்டளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பணியில் இருந்த, ஓட்டுப்பதிவு அலுவலர் ரேவதி, 38, என்பவர், திடீரென ஆக்ரோஷம் வந்தவராக எழுந்து, 'சாமி' ஆட ஆரம்பித்தார். 'நான் சிவன் வந்திருக்கேன்' என, உடலை முறுக்கி, சத்தம் போட்டதால், ஓட்டு போட வந்தவர்கள் சிதறி ஓடினர்.
அங்கிருந்தவர்கள், அவரை ஓட்டுச்சாவடி மையத்தில் இருந்து, வெளியில் அழைத்து வந்து, அமர வைத்தனர். ரேவதிக்கு பதில், மாற்று அலுவலரை, தேர்தல் அதிகாரிகள் நியமித்தனர். சில நிமிட பரபரப்புக்கு பின், மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.
ஓட்டுப்பதிவு அலுவலரான ரேவதி, கடலுார் கேப்பர்குவாரி அரசு மேல்நிலைப் பள்ளியில், இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

No comments:
Post a Comment