மீண்டும், ரூ.2,000 நோட்டு புழக்கம் சில்லறை தர முடியாமல் தட்டுப்பாடு
Added : ஏப் 19, 2019 00:16
தமிழகம் முழுவதும், மீண்டும், 500, 2,000 ரூபாய் நோட்டுக்கள் அதிகம் புழக்கத்திற்கு வந்துள்ளதால், சில்லறை தர முடியாமல், வியாபாரிகள் தவிக்கின்றனர். லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு பின், மாநிலம் முழுவதும், 500, 2,000 ரூபாய் நோட்டுக்கள் திடீரென மாயமானது. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, அரசியல் கட்சியினர், அவற்றை பதுக்குவதாக தகவல்கள் வெளியானது. வங்கிகளின், ஏ.டி.எம்., இயந்திரங்களிலும், 100 ரூபாய், 200 ரூபாய் அதிகம் வழங்கப்பட்டது, பொதுமக்களிடம் சந்தேகத்தை அதிகரித்தது.
பல தொகுதிகளில், தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற கட்சியினருக்கு, தினமும், 300 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை, கட்சிகளால் வழங்கப்பட்டது. பூத் முகவர்களுக்கு, 500, 2,000 ரூபாய் நோட்டுக்கள் அதிகம் வழங்கப்பட்டன. சில தொகுதிகளில், வாக்காளர்களுக்கு, 250 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது.
இதனால், மீண்டும், 500, 2,000 ரூபாய் நோட்டுக்கள் அதிகம் புழக்கத்திற்கு வந்துள்ளன. பொருட்கள் வாங்க வரும் மக்கள், இந்த நோட்டுக்களுடன் வருவதால், சில்லறை தர முடியாமல், வியாபாரிகள் தவித்து வருகின்றனர். தொடர்ந்து, இந்த ரூபாய் நோட்டுக்கள் அதிகம் புழக்கத்தில் வரும் என்பதால், ஒரிரு நாட்களில், சில்லறை தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. - நமது நிருபர் -

No comments:
Post a Comment