Tuesday, April 16, 2019

குழந்தைகளுக்கு வலியில்லாமல் இன்சுலின் செலுத்தும் முறை விரைவில் அறிமுகம்ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ பேட்டி


குழந்தைகளுக்கு வலியில்லாமல் இன்சுலின் செலுத்தும் முறை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி மற்றும் பேராசிரியர் டாக்டர் தர்மராஜன் கலந்துகொண்டனர்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 04:15 AM

சென்னை,

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சர்க்கரை நோய் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ‘குளுக்கோமீட்டர்’ மற்றும் ‘குளுக்கோ ஸ்டிரிப்ஸ்’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி மற்றும் பேராசிரியர் டாக்டர் தர்மராஜன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் டாக்டர் ஜெயந்தி பேசியதாவது:-

குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் குறைபாடு முறையான சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால் உடலுறுப்புகள் பாதிப்படையும். சர்க்கரை நோய் குறைபாடை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் கட்டுப்படுத்த முடியும். குழந்தைகளுக்கு வலியில்லாமல் இன்சுலின் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து குழந்தைகளின் பெற்றோரிடம் ‘குளுக்கோமீட்டர்’ மற்றும் 50 ‘குளுக்கோ ஸ்டிரிப்ஸ்’ வழங்கப்பட்டது. பின்னர் ‘குளுக்கோமீட்டர்’ பயன்படுத்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் அரசர் சீராளர், பேராசிரியை டாக்டர் பூவழகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024