Thursday, April 18, 2019

பல சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது; ஓட்டுப்பதிவு தாமதம்

Updated : ஏப் 18, 2019 08:47 | Added : ஏப் 18, 2019 08:05

சென்னை: காலை முதல் தமிழகத்தில் ஓட்டப்பதிவு வேகமாக நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திரம் சிறிது பழுது காரணமாக சில சாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதமானது. பழுது ஆன சாவடிகள் வருமாறு:

சேலம் செட்டிமாங்குறிச்சி, நாகை தலைஞாயிறு ஓரடியம்புலம், கோவை, கடலூர், கோவை அரசு கல்லூரி ஓட்டுச்சாவடி எண் 77, மற்றும் 78 , திருப்பூர் வடக்கு ஓட்டுச்சாடி எண் 64 , நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளி சாவடி , ஊட்டி காந்தல் 26 வது வார்டு பகுதியில் ஓம்பிரகாஷ் பள்ளி சாவடி , மதுரை மாவட்டம் பேரையூர் குருவப்ப நாயக்கன்பட்டி, மதுரை மாவட்டம் மேலூர் கிடாரிப்பட்டி. சேலம் ஆத்தூர் கெங்கைவல்லியில் நத்தக்கரை, ராமநாதபுரம் பாரதிநகர் , விருதுநகர் அவனியாபுரம் ஊராட்சி பள்ளி சாவடி, உசிலம்பட்டி முத்துப்பாண்டி பட்டி, ஆகிய பகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக ஓட்டுப்பதிவு தாதமானது.

பெரம்பலூர் திருச்சியில் பாதிப்பு

தேனி பெரியகுளம் செவன்த்டே பள்ளி , நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், ஆத்தூர் , திருவள்ளூர் மாவட்டம் காக்கனூர், கடம்பலூர், திருவூர், ஒட்டன்சத்திரம் கஸ்தூரி பள்ளி, ராமநாதபுரம் பாரதிநகர், கோவை சித்தாபுதூார் அரசு பள்ளி, பெரம்பலூர் தொகுதியில் மவுலானாபள்ளி, தண்ணீர்பந்தல், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட 10 சாவடிகள், கோவில்பட்டி வேலாயுதபுரம் ஒட்டுச்சாவடி, சென்னை அண்ணாநகர் மேற்கு ஓட்டுச்சாவடி, திருச்சி மாநகர் பகுதிகளில் 6 சாவடிகளிலும் , புறநகர் 9 சாவடிகளிலும், புதுக்கோட்டையில் 16 இடங்களிலும், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு தாமதமானது.

கமல் ஓட்டுப்போட முடியவில்லை

சென்னை ஆழ்வார்பேட்டையில் மின்வெட்டு காரணமாக ஓட்டுப்பதிவு தாமதம் ஏற்பட்டது. இங்கு கமல் ஓட்டளிக்க முடியாமல் வரிசையில் காத்து நின்றார். உள்ளிட்ட சாவடிகளில் பழுது ஏற்பட்டது. சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். பழுது சரியானதும் கமல் தனது மகள் ஸ்ருதியுடன் ஓட்டளித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024