Friday, May 3, 2019

மாணவர்கள் புகைப்படத்துடன் 'ஆன்லைன் 'டிசி': இந்த ஆண்டு முதல் வழங்க கல்வித்துறை உத்தரவு

Added : மே 03, 2019 02:43

தேனி:இந்த ஆண்டு முதல் மாணவர்கள் புகைப்படத்துடன்' ஆன்லைன்' மாற்றுச் சான்றிதழ் ('டிசி') வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்கள் குறித்து 'எமிஸ்' மூலம் முழுவிபரம், ஆதார் எண்ணுடன் கல்வித்துறை 'சர்வரில்' பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு வரை கையால் எழுதி 'டிசி' தலைமையாசிரியர் கையெழுத்துடன் வழங்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளுக்கும் டிஜிட்டல் மயமாக ஆன்லைன் 'டிசி' வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளி வாரியாக 11 எண் கொண்ட 'யூடிஎஸ்' எண் கல்வித்துறை வழங்கியுள்ளது. கம்ப்யூட்டரில் அதனை பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளி சர்வரில் மாணவர்களை பற்றிய விபரங்கள் இருக்கும்.

மாணவரின் 'எமிஸ்' எண்ணை டைப் செய்தால் அதில் அவரின் பெயர், பிறந்த தேதி, ஜாதி, மதம், பெற்றோர் பெயர், பள்ளியில் சேர்ந்த தேதி, கடந்த ஆண்டு படித்த வகுப்பு, தேர்ச்சி பெற்ற வகுப்பு போன்றவை தெரியவரும். மாணவரின் மச்ச அடையாளங்களை பதிவு செய்து தலைமையாசிரியரின் டிஜிட்டல் கையெழுத்துடன் பிரின்ட் எடுக்கலாம்.

இரு நகல்கள் மாணவர்கள் புகைப்படத்துடன் கிடைக்கும். அதில் ஒன்று மாணவர்களுக்கும், மற்றொன்று பள்ளி ஆவணமாகவும் பராமரிக்கப்படும்.தேனி முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து கூறுகையில் 'பிளஸ் 2முடித்தவர்கள் தற்காலிகமாக கையால் எழுதப்பட்ட சான்று பெற்றுள்ளனர். மதிப்பெண் பட்டியலுடன் அவர்களுக்கு 'ஆன்லைன்' 'டிசி' வழங்கப்படும்,' என்றார்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...