வெளிநாட்டு நிதி: இன்போசிஸ்' பதிவு ரத்து
Added : மே 14, 2019 06:27
புதுடில்லி: நாட்டில் உள்ள அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதிக்கு, ஆண்டுதோறும், வரவு - செலவு கணக்குகளை, மத்திய உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, 'இன்போசிஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான, 'இன்போசிஸ் பவுண்டேஷன்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளாக, வரவு - செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இது குறித்து பலமுறை நினைவூட்டியும், கணக்கு தாக்கல் செய்யாததால், அவர்கள் வெளிநாட்டில் இருந்து, நிதி பெறுவதற்கான பதிவு ரத்து செய்யப்படுவதாக, உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment