Wednesday, May 1, 2019

சீசன் நேரத்திலும் வெறிச்சோடிய தேக்கடி

Added : ஏப் 30, 2019 23:53



கூடலுார் : சீசன் நேரத்திலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து தேக்கடி வெறிச்சோடி காணப்படுகிறது.கேரளாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தேக்கடியும் ஒன்றாகும். ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே வனவிலங்குகளை கண்டு ரசிப்பது தனிச்சிறப்பாகும். ஆண்டுதோறும் ஏப்., மே மாதத்தில் பள்ளி கோடை விடுமுறை காரணமாக ஏராளமானோர் சுற்றுலா வருவர். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் தேர்தல் நடந்ததால் பயணிகள் வருகை குறைந்தது.

தேர்தல் முடிந்தபின்பும் வருகை இல்லை.சுற்றுலா பயணி ஒருவர் கூறும்போது, தேக்கடியில் நுழைவுக்கட்டணம் ரூ.45 ஆகவும், படகு சவாரிக்கான கட்டணம் ரூ.255 ஆகவும் சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் சிறிது துாரம் மட்டும் சென்றுவிட்டு 45 நிமிடத்தில் இறக்கி விட்டு விடுகின்றனர். இதனால் பயணிகள் பலர் மற்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல துவங்கி விட்டனர்', என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024