புதுச்சேரி நன்றாக இருக்க வாழ்த்துகிறேன்
Added : மே 01, 2019 00:48
கவர்னர் கிரண்பேடி கருத்து
கவர்னர் கிரண்பேடி கருத்து
புதுச்சேரி:'புதுச்சேரி நன்றாக இருக்க வாழ்த்துகிறேன்' என, அவருக்கான அதிகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து, கவர்னர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிட, கவர்னர் கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அதிகாரத்தை மதுரை ஐகோர்ட் கிளை நேற்று ரத்து செய்தது. இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்துள்ள கருத்தில், 'நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்து வருகிறோம். அதன் பிறகே இது தொடர்பாக தெளிவான பார்வையை தெரிவிக்க முடியும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போதும் அமலில்தான் உள்ளது. கவர்னர் மாளிகைக்கு வழக்கல்போல் வரும் கோப்புகளை ஆய்வு செய்து அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக, பதவி உயர்வு, நியமனங்கள், ஒழுங்கு நடவடிக்கைகள், நிதி உள்ளிட்ட கோப்புகள் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி ஆய்வு செய்து அனுமதிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி நன்றாக இருக்க நான் வாழ்த்துகிறேன். புதுச்சேரியில் உள்ள அனைத்து மக்களும் விரைவாக முடிவெடுக்க கூடிய ஆளுமை திறன் திறன் கொண்டவர்கள். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் முழுமையாகவும், நேர்மையாகவும், பொறுப்புடனும் நிதி மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும். மக்களுக்கு சிறந்த நிர்வாகம் கிடைக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment