Monday, August 5, 2019

‘ ரயில்ல சார்ஜ் அதிகம்... ஃபிளைட்ல போங்க!' அதிகாரிகளுக்கு ரயில்வே துறையின் `அடடே' ஆர்டர்

ராம் பிரசாத்

தென் மேற்கு ரயில்வே மண்டலங்களில் பணிபுரியும் அதிகாரிகள் அலுவல் காரணமாக டெல்லிக்கு பயணமாகும் போது இனி விமானங்களில் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


விமானம்

இந்தியாவில் ரயில்கள் முக்கிய போக்குவரத்தாக பார்க்கப்படுகிறது. பேருந்தை ஒப்பிடுகையில் ரயில்களில் பயணச்செலவு குறைவு தேவையான வசதிகளும் இருக்கும். இதன்காரணமாகவே மக்கள் ரயில் பயணங்களை தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில் ரயில்வே வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் ரயில்வே

தென்மேற்கு ரயில்வே மண்டலங்களில் பணிபுரியும் அதிகாரிகள் அலுவல் காரணமாக டெல்லி, மும்பை, கொல்கத்தாவுக்கு பயணமாகும் போது இனி விமானங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணச்செலவு, நேரமும் குறைவு என்பதால் விமான பயணங்களை தேர்வு செய்துக்கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூப்ளி, கர்நாடகாவை தலைமையிடமாக கொண்டு தென்மேற்கு ரயில்வே மண்டலங்கள் இயங்குகிறது. இங்கிருக்கும் அதிகாரிகள் அலுவல் காரணமாக டெல்லி, மும்பைக்கு ஏ.சி 1, ஏ.சி 2 கோச்களில் பயணிக்கின்றனர். இதற்கு செலவிடும் கட்டணத்தை ஒப்பிடுகையில் விமான கட்டணம் மலிவானது. மேலும் 2 மணி நேர மீட்டிங்கிற்காக அவர்கள் மூன்று நாள்களை செலவு செய்ய வேண்டிருக்கும். கர்நாடகாவில் இருந்து இந்த நகரங்களுக்கு குறைந்தது 12 மணிநேரமாவது பயணம் செய்ய வேண்டும். விமானப்பயணம் நேரத்தை மிச்சப்படுத்தும். தங்களுக்கு சவுகரியமான நேரங்களில் அதிகாரிகள் சென்று வரலாம்.

ரயில்

தென் மேற்கு மண்டலத்தின் துணை பொதுமேலாளர், இதனை சுட்டிக்காட்டி மூத்த அதிகாரிகளுக்கான விமான பயணத்திற்கு ஒப்புதல் கோரி பொது மேலாளருக்கு ஜூலை 31-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு இதற்கான ஒப்புதலை ஆகஸ்ட்-1-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. “விமான பயணம் நேரத்தை மிச்சப்படுத்தும் மேலும் 2 மணி நேர மீட்டிங்குக்காக அதிக நாள்களை செலவிட வேண்டியிருக்காது” என தென்மேற்கு மண்டல பொது மேலாளர் அஜய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024