சித்தா மருத்துவ படிப்புக்கு 2,300 பேர் விண்ணப்பம்
Added : செப் 13, 2019 22:55
சென்னை : சித்தா, ஆயுர்வேதம் மருத்துவ படிப்புகளுக்கு, 2,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். பாரம்பரிய மருத்துவ படிப்புகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 280 இடங்கள் உள்ளன.
அதேபோல், தனியார் மருத்துவ கல்லுாரியில், அரசு ஒதுக்கீட்டில், 1,000 இடங்கள்; நிர்வாக ஒதுக்கீட்டில், 500 இடங்கள் உள்ளன.இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவு தேர்வு வாயிலாக நடத்தப்படுகிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஆக., 28ல் துவங்கியது. விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிப்பது, நேற்று மாலை, 5:00 மணியுடன் நிறைவடைந்தது.இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 1,600 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 700 பேர் என, 2,300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அடுத்த வாரத்தில், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:
Post a Comment