Sunday, September 8, 2019

பி.டி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' கட் - ஆப் குறைப்பு

Added : செப் 08, 2019 02:56

புதுடில்லி:பல் மருத்துவத்தின் இளநிலை படிப்புக்கு, 'நீட்' தகுதி தேர்வு மதிப்பெண், 10 சதமானம் குறைக்கப்பட்டுள்ளது.

பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ இளநிலை படிப்புக்கு, நீட் எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது. இவ்வாண்டு, பல் மருத்துவப் படிப்புக்கு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை நடந்து முடிந்தது. ஆனாலும், ஏராளமான இடங்கள் நிரம்பவில்லை.இதைத் தொடர்ந்து, இந்திய பல் மருத்துவ கவுன்சிலுடன் நடந்த ஆலோசனையின் அடிப்படையில், தகுதி தேர்வு மதிப்பெண்களை குறைத்து, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதன் படி, பி.டி.எஸ்., படிப்புக்கு, நீட் தேர்வில், பொதுப்பிரிவினருக்கு குறைந்த பட்சம், 40 சதமானம்; எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, 30 சதமானம்; மாற்றுத்திறனாளிகளுக்கு, 35 சதமானம் என, தகுதி தேர்வு மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன் படி, தகுதி பெறுவோரின் புதிய பட்டியலை தயாரித்து வெளியிட, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இதே போல, பல் மருத்துவ முதுநிலை படிப்புக்கும், நீட் தகுதி தேர்வு மதிப்பெண், கடந்த மே மாதம் குறைத்து அறிவிக்கப்பட்டது. அதன்படி, இவ்வாண்டில், பொதுப்பிரிவினருக்கு, குறைந்த பட்சம் 44 சதமானம்; எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு, 34 சதமானம்; மாற்றுத்திறனாளிகளுக்கு, 30 சதமானம் என, தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024