நாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல்
Updated : செப் 17, 2019 08:02 | Added : செப் 17, 2019 07:59
சென்னை: ஸ்டிரைக் மற்றும் விடுமுறை தினங்களால், தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி சேவையை பயன்படுத்த முடியாது; வாடிக்கையாளர்கள், முன்னதாகவே திட்டமிட்டு பணிகளை முடிக்க, வங்கியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், 10 பொது துறை வங்கிகள் இணைக்கப்படும் என, ஆக., 31ல் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்., 1ல், வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். தற்போது, வங்கி அதிகாரிகள் மட்டும், இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர். அதனால், வங்கி பணிகள் அனைத்தும் பாதிக்கப்படும். வரும் 28ம் தேதி, நான்காவது சனிக்கிழமை, 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. எனவே, தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி சேவையை பயன்படுத்த முடியாது.
பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, காசோலை பரிமாற்றம் என பல்வேறுதேவைகளுக்கு தொழில்முனைவோர், தொழிலாளர்கள், பொதுமக்கள் தினமும் வங்கிகளை நாடுகின்றனர். ஸ்டிரைக், விடுமுறை தினங்கள் என, தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி சேவை பாதிக்கப்படும் என்பதால், வாடிக்கையாளர்கள், முன்னதாகவே திட்டமிட்டு வங்கி பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஏ.டி.எம்., மையங்களில் தனியார் நிறுவனங்கள் பணம் நிரப்புகின்றன, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், ஏ.டி.எம்.,ல் பணம் தட்டுப்பாடின்றி நிரப்புவதிலும் சிரமம் ஏற்படலாம். எனவே, அனைத்து தரப்பினரும், வங்கி சார்ந்த பணிகளை முன்னரே முடித்துக்கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்கான தொகையை, முன்னரே எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment