Wednesday, October 2, 2019

இதே நாளில் அன்று

Added : அக் 01, 2019 22:27




அக் 01, 2019 22:27

லால்பகதுார் சாஸ்திரி: உத்தர பிரதேச மாநிலம், முகல்சராய் என்ற ஊரில், சாரதா பிரசாத் --- ராம்துலாரி தேவி தம்பதிக்கு, 1904, அக்., 2ல் பிறந்தார். காங்கிரஸ் அமைச்சரவையில், மத்திய போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு, வணிக மற்றும் தொழில் துறை, உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

மத்திய ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணிபுரிந்தார். அப்போது, தமிழகத்தில் உள்ள அரியலுாரில் நடந்த ரயில் விபத்தில், 144 பேர் பலியாகினர். விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து, சாஸ்திரி விலகினார். நாட்டின் முதல் பிரதமரான, ஜவஹர்லால் நேரு, 1964ல் காலமானார். அவருக்கு அடுத்ததாக, லால் பகதுார் சாஸ்திரி, நாட்டின் இரண்டாவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில், அப்போதைய சோவியத் யூனியனில் இருந்த, உஸ்பெகிஸ்தான், தாஷ்கென்ட்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அங்கு, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், 1966, ஜன., 11ல் காலமானார். லால் பகதுார் சாஸ்திரி பிறந்த தினம் இன்று.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024