Thursday, October 3, 2019

தானாக அழியும் செய்தி 'வாட்ஸ்ஆப்'பில் வசதி

Added : அக் 03, 2019 01:26

புதுடில்லி : குறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்தியை, தானாகவே அழியும் புதிய வசதியை அறிமுகம் செய்ய, 'வாட்ஸ்ஆப்' சமூக வலை தளம் திட்டமிட்டுள்ளது.

'வாட்ஸ்ஆப்' சமூக வலை தளத்தில், ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்தி நிரந்தரமாக இருக்கும். அதே நேரத்தில், செய்தியை அனுப்பி, பெறுபவர் பார்ப்பதற்கு முன், அந்த செய்தியை ரத்து செய்யும் வசதி உள்ளது.அவ்வாறு இல்லாமல், நம்முடைய செய்தியை பெறுபவர் படிக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, அந்த செய்தி, தானாகவே அழியும் வசதியை அறிமுகம் செய்ய, வாட்ஸ் ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மிகவும் முக்கியமான செய்திகளை அனுப்பும்போது, பாதுகாப்பு கருதி, அது நீண்ட நாட்கள் மற்றவர்களிடம் இருக்க வேண்டாம் என நினைப்பவர்களுக்கு இந்த வசதி உதவும். இந்த திட்டத்தின்படி, செய்தியை நாம் அனுப்பும்போது, ஐந்து விநாடிகள் அல்லது ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அந்த செய்தி தானாகவே அழியும் வசதியை தேர்வு செய்ய வேண்டும்.இது தொடர்பான சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஆனால், எப்போதிருந்து இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

'ரிங்டோன்' நேரம் குறைப்புரிலையன்ஸ் ஜியோ மொபைல் எண்ணுக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும்போது, 'ரிங்கிங்' நேரம் எனப்படும், அது ஒலிக்கும் காலத்தை, அந்த நிறுவனம், 20 விநாடிகளாக குறைத்தது. மற்ற நிறுவனங்களின் எதிர்ப்பை அடுத்து, 25 விநாடிகளாக உயர்த்தியது.இந்நிலையில், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களும், ஒலிக்கும் காலத்தை, 35 - 40 விநாடிகளில் இருந்து, 25 விநாடிகளக குறைத்துள்ளன.ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் எண்ணில் இருந்து மற்றொரு நிறுவனத்தின் எண்ணை தொடர்பு கொள்ளும்போது, எங்கிருந்து அழைப்பு செல்கிறதோ அந்த நிறுவனம், மற்ற நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதை தவிர்க்கும் வகையில், இந்த ஒலிக்கும் காலத்தை, இந்த நிறுவனங்கள் குறைத்துள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024