Sunday, November 17, 2019

ராகிங்' தொல்லை 16 டாக்டர்களுக்கு சிக்கல்

Added : நவ 17, 2019 00:04

மும்பை:மஹாராஷ்டிர மாநிலம் பால்ஹரில், மருத்துவக் கல்லுாரி மாணவியை, 'ராகிங்' செய்ததாக, 16 டாக்டர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. இங்கு, பால்ஹர் மாவட்டத்தில், எம்.எல்.தவாலே நினைவு ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரி உள்ளது. இங்கு படித்து வரும், 23 வயது மாணவி, டாக்டர்கள் சிலர், தன்னை ராகிங் செய்வதாக போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், மருத்துவக் கல்லுாரியில் பணியாற்றி வரும் பயிற்சி டாக்டர்கள் மற்றும் சீனியர் மாணவர்கள், 16 பேர், மாணவியை ராகிங் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024