Friday, November 8, 2019

உயர் கல்வி நிறுவனங்களில் ரொக்க பரிவர்த்தனைக்கு தடை

Added : நவ 07, 2019 23:25

சென்னை: அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், ரொக்க பண பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள, வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்களில், நிதி பரிவர்த்தனைகளை, 'ஆன்லைன்' வழியாகவும், மின்னணு முறையிலும் மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை பின்பற்றி, அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், ரொக்க பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம். தேர்வு கட்டணம், கல்வி கட்டணம், மாணவர் சேர்க்கை கட்டணம் உள்ளிட்டவற்றை, 'ஆன்லைன்' வழியே பெற வேண்டும்.அதேபோல், பல்கலையின் உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு செலவுகள் உள்ளிட்ட அனைத்தையும், 'டிஜிட்டல்' வழியிலேயே மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024