திருக்குறள் சொல்லுங்க பிரியாணி மெல்லுங்க
Added : நவ 08, 2019 01:36 |
திண்டுக்கல், :நவ.14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று குழந்தைகளின் சிந்தனையை துாண்டும் வகையில் திண்டுக்கல்லை சேர்ந்த முஜிப் பிரியாணி கடை புதுமை போட்டியை அறிவித்துள்ளது. அதன்படி திருக்குறள் ஒப்பிக்கும் 133 குழந்தைகளுக்கு இலவசமாக அரைபிளேட் பிரியாணி வழங்கப்பட உள்ளது.
உரிமையாளர் ேஷக்முஜிபுர் ரஹ்மான் கூறியதாவது: ''மெய்ப்பொருள் காண்பதறிவு'' என்ற தலைப்பில் இளைய தலைமுறையின் சிந்தனைக்கு வித்திடும் வகையில் நவ.14 அன்று 'குழந்தைகள் தின பிரியாணி'யை அறிவித்துள்ளோம். இக்காலத்திற்கேற்ப 5 நிமிடங்களில் 5 திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும்.ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரையான மாணவர்களே பங்கேற்கலாம். வெற்றி பெறும் குழந்தைக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும். நடுவர்களாக 5 தமிழாசிரியர்கள் பங்கேற்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்வதால், மாலை 4:00 மணிக்கு மேல்தான் போட்டி நடைபெறும், என்றார்.

No comments:
Post a Comment