Tuesday, November 19, 2019

'நீட்' ஆள்மாறாட்ட வழக்கு டாக்டர் ஜாமின் மனு தள்ளுபடி

Added : நவ 19, 2019 01:10

மதுரை:'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், சென்னை டாக்டர் வெங்கடேசனின் ஜாமின் மனுவை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

சென்னை, தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர், வெங்கடேசன். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர். இவரது மகன் உதித் சூர்யா.'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட புகாரில், இருவரையும், தேனி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். உதித் சூர்யாவிற்கு, அக்., 17ல் உயர் நீதிமன்றக் கிளை, நிபந்தனை ஜாமின் வழங்கியது. அவரது தந்தையின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.வெங்கடேசன், 'செப்., 25ல் கைது செய்யப்பட்டேன். எனக்கு சிறுநீர் தொற்று, சிறுநீரக கல் அடைப்பு பிரச்னை உள்ளது. 'மதுரை மத்திய சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறேன். முறையாக சிகிச்சை பெற வேண்டியுள்ளது. ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என, மீண்டும் மனு செய்தார். நீதிபதி, ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று விசாரித்தார்.அரசு தரப்பில், 'முக்கிய குற்றவாளியை கைது செய்யவில்லை. விசாரணை துவக்க நிலையில் உள்ளது. ஜாமின் அனுமதிக்கக் கூடாது' என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வாபஸ் பெற்றதால், நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024