Wednesday, November 13, 2019

மாணவன் கைரேகை ஆய்வுக்கு உத்தரவு

Added : நவ 13, 2019 01:08

மதுரை : 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், மாணவரின் கைரேகையை ஆய்வு செய்ய, உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோபாலபுரம் மாணவர் ரிஷிகாந்த், 19, அவரது தந்தை ரவிகுமார், 61, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் எங்களை விசாரணைக்கு அழைக்கின்றனர். எங்களை கைது செய்வரோ என அச்சப்படுகிறோம். முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தனர் .நீதிபதி, ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு:ரிஷிகாந்தின் கைவிரல் ரேகை பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதற்காக அவர், சம்பந்தப்பட்ட கல்லுாரியில் ஆஜராக வேண்டும்.

மனுதாரர்கள் இருவரையும் கைது செய்யக்கூடாது என ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு, நவ. 19 வரை நீட்டிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024