நீண்ட நாட்களாக அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்கள் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு
சென்னை 14.3.2020
பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை, கல்லூரியில் பயின்று முடித்த, 4 ஆண்டுகளுக்குள் அரியர் தேர்வுகளை எழுதி பட்டம் பெற வாய்ப்பு வழங்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2000-ம் ஆண்டில் படிப்பை முடித்து பட்டம் பெற முடியாமல் சுமார் 30 ஆயிரம் பேர் அரியர் வைத்துள்ளனர்.
இந்த மாணவர்களின் நலன் கருதி சிறப்புத் தேர்வு நடத்த அண்ணா பல்கலை.யின் ஆட்சி மன்றக் குழு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவு செய்தது. அதன்படி, 2019-ம் ஆண்டு நவம்பரில் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், வரும் ஏப்ரலில் மீண்டும் சிறப்பு அரியர் தேர்வு நடக்க உள்ளதாக அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலை.வெளியிட்ட அறிவிப்பு:
பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்ததொடர் கோரிக்கையை ஏற்று, ஏற்கெனவே அளிக்கப்பட்ட கால அவகாசங்களைத் தவறவிட்டவர்களுக்கு அரியர்தேர்வு எழுத இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த சிறப்புத் தேர்வில் கடந்த 2000-ம்ஆண்டில் இருந்து அரியர் வைத்திருப்பவர்கள் மார்ச் 23-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்குவரும் ஏப்ரல் / மே மாதங்களில் நடைபெறும் பருவத் தேர்வுகளுடன் தேர்வுநடத்தப்படும். தேர்வுக்கான சிறப்புக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் https:coe1annauniv.edu இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment